தக்கர் பேரூ (Thakkar Pheru) அலாவுதீன் கில்சியின் நிதி நிர்வாகப் பொருளாளராக இருந்தாவராவார். இவர் 1291 ஆம் ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை இப்பணியில் செயல்பட்டார்.[1][2]
நாணயங்கள், உலோகங்கள் மேலும் ரத்தினங்கள் குறித்த சிறீமால் என்ற வல்லுநனராக அலாவுதீன் கில்சி இவரை நியமித்தார்.[3] தனது மகன் ஹேமபாலின் பயன்பாட்டுக்காக இத்துறை தொடர்பான நூல்களை எழுதியிருக்கிறார். 1315 இல் அலாவுதீன் கில்சிஜியின் கருவூலத்தில் தான் கண்ட அளப்பளரிய இரத்தின சேகரிப்புகளைக் பற்றி "இரத்தினப் பரிக்சா" என்ற நூலையும்"[4] 1318 ஆம் ஆண்டில் நாணயத் தயாரிப்பு ஆலையில் கிடைத்த அனுபங்களைக் கொண்டு "திரவியபரிக்சா" என்ற நூலையும் எழுதினார். கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சி வரை இவர் தொடர்ந்து பணியாற்றினார்.[5]
கணிதம் பற்றி இவர் எழுதிய "கணிதசாரகௌமுதி" என்ற நூலுக்காகவும் அறியப்படுகிறார்.[6]