தக்சின் ராய் (Dakshin Rai; "தெற்கின் ராஜா") என்பது இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் உள்ள சுந்தரவனக் காடுகளில் மிருகங்களையும் பேய்களையும் ஆளும் ஒரு போற்றப்படும் தெய்வம். இவர் சுந்தரவனக்காடுகளின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.[1][2] [3] மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக் காடுகளுக்குள் வாழ்வாதாரத்திற்காக நுழைபவர்கள் அனைவரும், அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், இந்தத் தெய்வத்தை வணங்குகிறார்கள்.[4]
சீல்டா தெற்கு வரிசையில், தப்தாபி நிலையம் உள்ளது. சில மைல்கள் தொலைவில் ஒரு தக்சின் ராய் கோவில் உள்ளது. இங்குப் புலிக் கடவுளை இந்தப் பகுதி மக்கள் வணங்குகிறார்கள். இவர் ஒரு காலத்தில் சுந்தரவன பகுதியைச் சேர்ந்தவர். இவரது ஆட்சிப்பகுதி தெற்கே நம்கானா காக்த்வீப் முதல் மேற்கில் பாகீரதி-ஹூக்ளி ஆறு-கங்கை வரையிலும், கிழக்கில் கட்டல் பக்லா மாவட்டம் வரையிலும், வங்காளதேசத்தின் குல்னா ஜெசோர் மாவட்டம் வரையிலும் பரவியிருந்தது.[5] ஒவ்வொரு அமாவாசையிலும், இவர் போற்றப்பட்டு விலங்கு பலிகளால் சாந்தப்படுத்தப்படுகிறார். தக்சி ராயும் இசையை விரும்புகிறார். மேலும் இசைக்கலைஞர்களை ஈர்க்கிறார். உள்ளூர் பழங்குடியினர் 'தெற்கின் ராஜாவை' மகிழ்விக்க இரவு முழுவதும் நடனமாடியும் பாடியும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள்.
தக்சின் ராயின் தந்தை பிரபாகர் ரே (தண்ட பக்ஷ முனி) ஒரு பிராமணர், தாய் நாராயணி.[6] இவரது தந்தை சுந்தரவன காடுகளின் ஆட்சியாளராக இருந்தார். இவர் பெரிய மீசையுடன் சித்தரிக்கப்படுகிறார். இவரது உடல் மெலிதானது, புலி போன்ற கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட பளபளப்பான, மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது. இவரின் வாயின் இருபுறமும் எச்சில் சொட்டுகிறது. இவருக்கு ஆறு மீட்டர் நீளமான வால் உள்ளது.
சுந்தரவன காடுகளில் வசிப்பவர்கள் சதுப்புநிலக் காடுகளுக்குள் செல்வதற்கு முன் தக்சின் ராய் அல்லது போன்பீபியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஏனெனில் இது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். சில பழங்குடியினரின் பூர்வீகவாசிகள், நெருங்கி வரும் புலியைக் குழப்பவோ அல்லது பயமுறுத்தவோ, அதன் தாக்குதலைத் தடுக்க தக்சின் ராயின் முகம் கொண்ட முகமூடியைத் தங்கள் தலையின் பின்புறமாகக் கட்டுகிறார்கள்.[2]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)