தங்கத் தேர் (Golden Chariot), இந்தியாவின் தென்னக மாநிலங்களில் இயக்கப்படும் ஆடம்பர விரைவு வண்டியாகும். இது கருநாடகம், கோவா, கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களின் வழியாக செல்லும். கருநாடகத்தின் ஹம்பியில் உள்ள கல்லால் ஆன தேரின் நினைவாக இந்த வண்டிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.[1] இந்த வண்டியில் 19 பெட்டிகள் இருக்கும். இந்த வண்டி 2015/2016ஆம் ஆண்டுகளில் அக்டோபர் முதல் மார்ச்சு வரை இயக்கப்படும். ஒவ்வொரு திங்களன்றும் புறப்படும்.[2]
2013ஆம் ஆண்டில், சிறந்த ஆடம்பர வண்டிக்கான விருதுக்கு இந்த வண்டி தேர்வு செய்யப்பட்டது.[3]
இந்த வண்டி இரண்டு வழிகளில் இயங்குகிறது.
இந்த வண்டி ஏழு இரவு, 8 பகல் நேரத்துக்கு பயணிக்கும்.இந்த வண்டி முதல் நாளில் பெங்களூரிலும், இரண்டாம் நாளில் மைசூரிலும், மூன்றாம் நாளில் நாகர்ஹொளே தேசியப் பூங்காவிலும், நான்காம் நாளில் ஹாசன், பேளூர், ஹளேபீடு ஆகிய இடங்களிலும், நைதாம் நாளில் ஹம்பியிலும், ஆறாம் நாளில் ஐஹொளே, பட்டடக்கல், பாதமி ஆகிய இடங்களிலும், ஏழாம் நாளில் கோவாவிலும் நிற்கும். எட்டாம் நாளில் பெங்களூருக்கு திரும்பும்.[4]
இந்த வண்டி ஏழு இரவு, எட்டு பகல் நேரத்துக்கு பயணிக்கும். முதல் நாளில் பெங்களூரிலும், இரண்டாம் நாளில் சென்னையிலும், மூன்றாம் நாளில் புதுச்சேரியிலும், நான்காம் நாளில் தஞ்சாவூரிலும், ஐந்தாம் நாளில் மதுரையிலும், ஆறாம் நாளில் திருவனந்தபுரத்திலும், ஏழாம் நாளில் ஆலப்புழா, கொச்சி ஆகிய இடங்களிலும் நிற்கும். எட்டாம் நாளில் பெங்களூருக்கு திரும்பும்.[5]