தங்கன் | |||||
---|---|---|---|---|---|
கலிஞ்சராதிபதி ("கலிஞ்சரின் இறைவன்") | |||||
சந்தேல அரசன் | |||||
ஆட்சிக்காலம் | சுமார் 950-999 பொ.ச. | ||||
முன்னையவர் | யசோவர்மன் | ||||
பின்னையவர் | காந்தன் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | காந்தன் | ||||
| |||||
அரசமரபு | சந்தேலர்கள் | ||||
தந்தை | யசோவர்மன் | ||||
தாய் | புஷ்பா |
தங்கன் (Dhanga ; ஆட்சிக்காலம் பொ.ச. 950-999 ) மேலும் கல்வெட்டுகளில் தங்கதேவன் என அழைக்கப்படும் இவன் 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவான். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தான். இவன் சந்தேலர்களின் இறையாண்மையை நிறுவினான். இவன் தனது ஆட்சி வரை கூர்ஜர பிரதிகாரர்களுக்கு அடிபணிந்து பணியாற்றினான். கஜுராஹோவில் விசுவநாதர் கோயில் உட்பட அற்புதமான கோயில்களை அமைத்ததற்காகவும் இவன் குறிப்பிடத்தக்கவன்.
கஜுராஹோ கல்வெட்டு எண். IV இன் படி, தங்கன். சந்தேல (சந்திரத்ரேய வம்சம்) மன்னன் யசோவர்மனுக்கும் அவனது இராணி புப்பா (புஷ்பா) தேவிக்கும் பிறந்தான்.[1]
பொ.ச. 953-954 தேதியிட்ட (விக்ரம் நாட்காட்டி 1011 ) சதுர்பூஜ் கல்வெட்டு இவனது ஆட்சியின் ஆரம்பகாலத்தைப் பற்றி கூறுகிறது. இதற்கு முன் எப்போதோ இவன் அரியணை ஏறியிருக்க வேண்டும். இராச்சியத்தின் மால்வா எல்லையைப் பாதுகாக்க இவனது சகோதரர் கிருட்டிணன் நியமிக்கப்பட்டிருந்ததால், இவனது ஏற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கலாம். [2]
தங்கனின் ஆட்சியின் பிற கல்வெட்டுகளில் நானோரா (அல்லது நன்யுரா) கல்வெட்டு (பொ.ச. 998 ), கஜுராஹோவில் உள்ள லாலாஜி கல்வெட்டு (பொ.ச.999 அல்லது 1002 என பல்வேறு தேதியிட்டது) ஆகியவை அடங்கும். [3] [4] இவருடைய சந்ததியினரின் கல்வெட்டுகளிலும் இவனுடைய பெயர் காணப்படுகிறது.
பொ.ச. 953-954 தேதியிட்ட கல்வெட்டின் படி, தங்கனின் இராச்சியம் பின்வரும் பகுதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது: [5] [6]
இவன் தன்னை கலிஞ்சராதிபதி ("கலிஞ்சராவின் இறைவன்") என்று அழைத்துக் கொண்டான். ஆனால் இவன் கஜுராஹோவை தனது இராச்சியத்தின் தலைநகராகக் கொண்டதாகத் தெரிகிறது. [1]
தங்கனின் முதலமைச்சராக பிரபாசா என்ற பிராமணர் இருந்தான்.அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரத்தின்படி சோதிக்கப்பட்ட பின்னர் நியமிக்கப்பட்டான்.[7] யசோதரன் என்பவர் தங்கனின் அரச குருவாக இருந்தார்.[8]
தங்கன் சைவ சமயத்தை பின்பற்றுபவனாக இருந்தாலும், மதங்களையும் மதித்தான். கஜுராஹோ கல்வெட்டு ஒன்று சிவன் கோவிலில் இரண்டு லிங்கங்களை நிறுவியதாக கூறுகிறது: ஒன்று மரகதம் மற்றும் ஒரு சாதாரண கல். இக்கோயில் விசுவநாதர் கோயில் என அடையாளப்படுத்தப்படுகிறது. [9]
தனது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட விஷ்ணு கோயிலை கட்டி முடித்தான். ஒரு சமகால கல்வெட்டு, தங்கன் சைனக் கோவிலுக்கு சில தோட்டங்களை வழங்கியதை பதிவு செய்கிறது. [10]
நூற்றுக்கும் மேற்பட்ட இலையுதிர்காலங்கள் வாழ்ந்த பிறகு, தங்கா தனது உடலை கங்கை ஆற்றிலும்யமுனை ஆற்றிலும் குளித்து வீடுபேற்றை அடைந்ததாக ஒரு கஜுராஹோ கல்வெட்டு தெரிவிக்கிறது.[11][12] சில அறிஞர்கள் இதை தற்கொலை என்று விளக்கினர். ஆனால் இராஜேந்திரலால் மித்ரா, இது ஒரு நபரின் மரணத்தை அறிவிப்பதற்கான வழக்கமான வழி என கருதினார். [3]
இவனுக்குப் பின் இவனது மகன் காந்த தேவன் ஆட்சிக்கு வந்தான்.{Sfn|Mitra|1977}} எஸ். கே. சுல்லரே (2004) இவனது ஆட்சியின் முடிவை பொ.ச. 999 என குறிப்பிடுகிறார்.[13] ஆர். கே. தீக்சித் (1976) 1002 வரை இவனது ஆட்சியின் முடிவைக் குறிப்பிடுகிறார். [14]