ஜே. தங்கன் வால்டிரோன் (J. Duncan Waldron) ஓர் இசுகாட்லாந்து கோளரங்க வானியலாளரும் ஒளிப்படவியலாளரும் இரு சிறுகோள்களின் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
இவர் இசுக்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ நகரத்தில் பிறந்தார். இவர் முதலில் எடின்பர்கு (பல்கலைக்கழக) அரசு வான்காணகத்தின் வானியல் ஒளிப்படத் தட்டுகளை உயர்தரத்தோடு மீளாக்கம் செய்வதில் ஈடுபட்டார். இவர் 1086 அக்தோபர் 19 இல் 3753 குரூயித்னே எனும் சிறுகோளைச் சைடிங் சுப்பிரிங் வான்காணகத்தில் ஐக்கிய இராச்சிய இசுக்கிமிடு தொலைநோக்கிவழி பணிசெய்யும்போது கண்டுபிடித்துள்ளார். பின்னர், 1986 நவம்பர் 21 இல் 5577 பிரீசுட்டிலி எனும் சிறுகோளையும் கண்டுபிடித்தார்.[1]
இவர் முதலில் 1995 இல், வான்காணகத்துக்கான இலக்கவியல் ஒளிப்பட முறைக்கு முதன்முதலாக முன்முயற்சி மேற்கொண்டபோது பெய்ண்ட் இழ்சாப் புரோ( Paint Shop Pro) எனும் கணினி ஒளிப்பட முறைக்கு அறிமுகமாகி உள்ளார். இந்தக் கணினி மென்பொருள் ஒளிப்படங்களின் ஓவியத்துக்கு வண்ணந்தீட்டும் பணிக்கு பன்னிறக் கலவைகளை இழைக்க உதவியதால் மிகுந்த ஆர்வத்தைத் தந்துள்ளது. இவரும் இவரது குடும்பமும் 1998 இல் ஆத்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்சுக்கு இடம்பெயர்ந்துள்ளது.