தங்கா டார்லாங் | |
---|---|
பிறப்பு | 20 ஜூலை 1920 இந்தியா |
இசை வடிவங்கள் | திரிபுராவின் நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
தங்கா டார்லாங் (பிறப்பு: ஜூலை 20, 1920) என்பவர் ஒரு இந்திய நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார், திரிபுராவின் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் பாரம்பரிய இசைக்கருவியான ரோசெமைப் பாதுகாத்து மேம்படுத்துவதிம், பயன்படுத்துவதிலும் அவர் செய்த பணிக்காக இந்திய அளவில் அறியப்பட்டவர்.
அவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2019) வழங்கப்பட்டது.[1] இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாடமி விருது ஐயும் அவர் 2014- ம் ஆண்டில் பெற்றுள்ளார்.[2] மேலும் அவர் அகாடமிக் பெல்லோஷிப் விருது (2015), மாநில அளவிலான வயோஸ்ரேஸ்தா சம்மன் (2016) மற்றும் நூற்றாண்டு விருது போன்றவைகளையும் அவரின் நாட்டுப்புற கலைச்சேவைக்காக பெற்றவர்.
டார்லாங், திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள கைலாஷாஹரின் கூர்நகர் ஆர் டி பிளாக்கின் கீழ் உள்ள சிறிய மலைப்பாங்கான ஏடிசி கிராமமான தியோரா செர்ரா முரைபாரியைச் சேர்ந்தவர் ஆவார். 2016 ஆம் ஆண்டில், ஜோசி ஜோசப் இயக்கிய திரிபுராவில் நாக்குகளின் மரம் படத்திலும் அவர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.[3]