பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13701-86-5 | |
ChemSpider | 103871330 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14440251 |
| |
பண்புகள் | |
WBr6 | |
வாய்ப்பாட்டு எடை | 663.264 கி/மோல் |
தோற்றம் | அடர் சாம்பல் திண்மம் |
அடர்த்தி | 5.32 கி/செ,மீ3 |
உருகுநிலை | 232 °C (450 °F; 505 K) (சிதைவடையும்) |
நீராற்பகுப்பு அடையும் | |
கரைதிறன் | எத்தனால், ஈதர், கார்பன் டைசல்பைடு, மற்றும் அமோனியா போன்றவற்றில் கரையும்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | R3 |
Lattice constant | a = 6.39 Å, c = 17.53 Å |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தங்குதன் அறுபுளோரைடு தங்குதன் அறுகுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன் அறுபுரோமைடு (Tungsten hexabromide) என்பது WBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தங்குதனும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தங்குதன்(VI) புரோமைடு என்றும் இச்சேர்மம் எழுதப்படுகிறது. அடர் சாம்பல் நிறத்தில் காற்று உணர்திறன் கொண்ட சேர்மமாகக் காணப்படுகிறது. 200 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் தங்குதன்(V) புரோமைடு மற்றும் புரோமினாக சிதைகிறது.[1][2]
நைட்ரசன் வாயு சூழலில் சுமார் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலோக தங்குதனும் புரோமின் வாயுவும் சேர்ந்து வினை புரிவதால் தங்குதன் அறுபுரோமைடு உற்பத்தி செய்யப்படுகிறது.:[1] [3]
அறை வெப்பநிலையில் தங்குதன் அறுகார்பனைலுடன் புரோமினைச் சேர்த்து வினை புரியச் செய்து தங்குதன் அறுபுரோமைடு தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும். இவ்வினையில் கார்பன் மோனாக்சைடைடு வெளியிடப்படுகிறது.[4]
போரான் முப்புரோமைடு மற்றும் தங்குதன் அறுகுளோரைடு ஆகியவற்றின் அணுப்பரிமற்ற வினையின் மூலமும் இதை உருவாக்க முடியும்.[5]
தங்குதன் அறுபுரோமைடு உயர்ந்த வெப்பநிலையில் தனிம ஆண்டிமனியுடன் சேர்ந்து வினைபுரிவதால் குறைக்கப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக WBr5, WBr4, W4Br10, W5Br12 எனவும் பின்னர் இறுதியாக 350 °செல்சியசு வெப்பநிலையில் WBr2. சேர்மமும் உற்பத்தியாகின்றன. இவ்வினையில் ஆண்டிமனி முப்புரோமைடு பக்கவிளைபொருளாக உருவாகிறது.[4][6] இந்த புரோமைடுகளில் ஏதேனும் ஒன்றை 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோமினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் தங்குதன் அறுபுரோமைடை மீளப்பெறலாம்.[7]
தண்ணீருடன் சேர்க்கப்படும்போது தங்குதன் அறுபுரோமைடு நீராற்பகுப்பு வினைக்கு உட்படுகிறது. தங்குதன் ஐந்தாக்சைடும் புரோமினும் கிடைக்கின்றன.[1]
தங்குதன் அறுபுரோமைடுடன் தங்குதன்(VI) ஆக்சைடு வினைபுரிவதால் தங்குதன்(VI) ஆக்சிடெட்ராபுரோமைடு உருவாகும்:[7]
தங்குதன் அறுபுரோமைடின் முக்கோண படிக அமைப்பு தனிமைப்படுத்தப்பட்ட WBr6 எண்முகங்களைக் கொண்டுள்ளது. α-WCl6 சேர்மத்துடன் இணையான கட்டமைப்பை கொண்டுள்ளது.[3]