தசார்னம் (Dasharna) (சமஸ்கிருதம்:दशार्ण Daśārṇa) பண்டைய பரத கண்டத்தின், கிழக்கு மால்வா பகுதியில் இருந்த ஜனபத நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகர் தற்கால விதிஷா ஆகும்.
தசான் ஆறு மற்றும் பேட்வா ஆறுகளுக்கிடையே, மால்வா பகுதியில் தசார்ன நாடு அமைந்திருந்தது. [1] தசார்ன ஜனபத நாட்டை அக்காரா என்றும் அழைப்பர்.[2] மேலும் முதலாம் ருத்திரதாமனின் ஜூனாகத் கல்வெட்டுகளில் தசார்ன நாட்டை அக்காரா என்று குறித்துள்ளார்.[3]
மகாபாரதக் குறிப்புகளின் படி, சேதி நாட்டு மன்னர் வீரபாகுவின் மனைவியும்; விதர்ப்ப நாட்டு மன்னர் பீஷ்மகனின் மனைவியும், தசார்ன நாட்டு மன்னரின் மகள்கள் ஆவார்.[4]