தசைதிசுப்படலச் சிகிச்சை (ஆங்கிலம்: Myofascial release) என்பது இயன்முறைமருத்தும் என பல வகையான மருத்தவ முறையில் தசை மற்றும் திசுப்படலம் சார்ந்த குறைபாடுகளுக்கு வழங்கப்படும் கைநுட்பச் சிகிச்சை வகை ஆகும். இது தசைதிசுவின் இலகுத்தன்மை, இயக்கம், பிடிப்பு, தழும்பு மற்றும் இறுக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டம், நிணநீர் ஓட்டம், தசை நீச்சிக்கான சீரமைப்புக்கும் பயன்படுகிறது.[1]
தசைதிசுப்படலம் என்பது மனித உடலில் தோலுக்கு தசைக்கும் இடையே அமைந்துள்ள ஒரு மெல்லிய இணைப்பு படலம் ஆகும். கிருமி தொற்று, எலும்பு முறிவு, தசை குறைபாடு, நீண்ட நாள் அசைவின்மை காரணமாக இந்த இணைப்பு படலம் தாம் அமைந்துள்ள் பகுதிகளில் வலி, தசை இருக்கும், இரத்த ஓட்டம் குறைவு ஆகிய தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது.[1]
அமெரிக்க புற்றுநோய் சமூகம் தனது அறிக்கையில் தசைதிசுப்படச் சிகிச்சை எனும் கைநுட்பச் சிகிச்சை ஒரளவுக்கு அறிவியல் ஆதாரங்கள் பெற்று வலி குறைக்கவும், தசை அசைவியன் மீள்தன்மையை சரிசெய்யவும் பயன்படுகிறது என கூறியுள்ளது. ஆனால் புற்றுநோயால் எற்படும் வலி மற்றும் இதர குறைபாடுகளை இது சரிசெய்யாது எனவும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளது.[2] மேலும் வருங்காலங்களில் இதன் மேல் நடத்தப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளும் முடிவுகளும் இந்த கைநுட்பச் சிகிச்சை முறைக்கு வலுசேர்க்கும்.[3]
{{cite book}}
: |work=
ignored (help)