தஞ்சை நால்வர் என்பவர்கள் 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த நான்கு சகோதரர்கள். நால்வரும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியின் அரசவையில் பணியாற்றியவர்கள். இவர்கள் இந்தியாவின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியத்திற்கும், கர்நாடக இசையின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களித்துள்ளனர்.