![]() | |
ஆள்கூறுகள்: 4°19′N 101°04′E / 4.317°N 101.067°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிந்தா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 31800 |
தொலைபேசி எண் | +60-5-36000 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
தஞ்சோங் துவாலாங் (ஆங்கிலம்: Tanjung Tualang; மலாய்: Tanjung Tualang; சீனம்: 丹绒都阿朗) என்பது மலேசியா, பேராக் மாநிலம், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்; முக்கிம் ஆகும். பத்து காஜா மாவட்ட நகராண்மைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. [1]
1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்தக் கிராமப்புற நகர்ப்பகுதி மலேசியாவின் முக்கிய ஈயச் சுரங்க நகரங்களில் ஒன்றாக விளங்கியது. தஞ்சோங் துவாலாங் நகரம் அதன் பெயரை துவாலாங் (Tualang) எனப்படும் ஒரு வகை மரத்தில் இருந்து பெற்றதாக அறியப்படுகிறது. பின்னர் ஒரு பெரிய ஈயச் சுரங்க நிறுவனமான தோ ஆலாங் (Toh Allang Chinese Tin Ltd) நிறுவனத்தின் பெயரும் இந்த இடத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.[2]
1939-இல் தஞ்சோங் துவாலாங் மலாயா பொதுவுடைமை கட்சிக்கு (Communist Party of Malaya) ஒரு முக்கியப் புகலிடமாகவும் விளங்கியது. அந்த்க கட்சியில் அந்த்க கட்டத்தில் நன்கு அறியப்பட்ட மலாய்த் தலைவர் ரசீட் மைதீன் (Rashid Maidin) என்பவர் து லுங் சான் (Tu Lung Shan) எனும் மற்றொரு சீனத் தலைவரால் தஞ்சோங் துவாலாங் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார்.
1900-களின் மத்தியப் பகுதியில் தஞ்சோங் துவாலாங்கின் சுரங்கப் பகுதிகளைப் பல பன்னாட்டு ஈயச் சுரங்க நிறுவனங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. அந்த நிறுவனங்கள்:
1970-ஆம் ஆண்டுகளில் சுமார் 5 மிகப் பெரிய ஈய அகழ்வாய்வு இயந்திரங்கள் (Dredging Machines) இருந்தன. அவை உலகின் மிகப்பெரிய ஈயம் தோண்டும் இயந்திரங்களில் ஒரு பகுதியாகும். தஞ்சோங் துவாலாங்கில் பல சிறிய வகை ஈயம் தோண்டும் இயந்திரங்களும் இருந்தன. பெரிய இயந்திரங்கள் பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. உள்ளூர் சுரங்க நிறுவனங்கள் "பாலோங்" (Palong) வகை சுரங்க முறைகளைப் பயன்படுத்தின.[3]
இன்றைய நிலையில் அந்தப் பழைய சுரங்கப் பகுதிகள், நன்னீர் இறால் மீன்களை வளர்ப்பதற்கான நன்னீர் குளங்களாக மாற்றப்பட்டுள்ளன. சில பகுதிகள் செம்பனை தோட்டங்களாக மாற்றப்பட்டன. அதே வேளையில் ஏராளமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. அந்தத் தோட்டங்கள் தனிநபர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமானவையாக உள்ளன.[4]