தஞ்சோங் (P049) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Tanjong (P049) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு பினாங்கு |
வாக்காளர் தொகுதி | தஞ்சோங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஜார்ஜ் டவுன்; கொம்தார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | லிம் உய் இங் (Lim Hui Ying) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 52,803[1] |
தொகுதி பரப்பளவு | 6 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
தஞ்சோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong; ஆங்கிலம்: Tanjong Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P049); மற்றும் மலேசியாவில் மிகச் சிறிய மக்களவைத் தொகுதியும் ஆகும்.[3]
தஞ்சோங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவைத் தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
தஞ்சோங் மக்களவைத் தொகுதி பினாங்கு மாநிலத் தலைநகரமான ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் மையத்தில் உள்ளது. இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் (King George III) நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானிய குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.[5]
இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மாநகரில் ஏறக்குறைய 708,127 பேர் வசிக்கிறார்கள். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஜார்ஜ் டவுன் மாநகரம் இரண்டாவது இடம் வகிக்கிறது.[6]
ஜார்ஜ் டவுன் மாநகரக் கூட்டம் (Greater Penang) என அழைக்கப்படும் பெருநகர் பகுதி அமைப்பில்; ஜார்ஜ் டவுன், பினாங்கு ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன.
இங்கு சுமார் 2,412,616 பேர் வசிக்கிறார்கள். இந்த பெருநகரப் பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும். இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (World Heritage Site).
இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது.
வரலாற்று இணைப்புகள் | காலம் |
---|---|
கெடா சுல்தானகம் | 1136–1786 |
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி | 1786–1867 |
நீரிணை குடியேற்றங்கள் | 1826–1941; 1945–1946 |
மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு | 1941–1945 |
மலாயா ஒன்றியம் | 1946–1948 |
மலாயா கூட்டமைப்பு | 1948–1963 |
மலேசியா | 1963–தற்போது |
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவைத் தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
பாடாங் கோத்தா (Padang Kota) (N26) |
Northam Road | 049/26/01 | SJK (C) Union |
Pykett Avenue | 049/26/02 | SJK (C) Union | |
Rangoon Road | 049/26/03 | SMK (P) Methodist | |
Nagore Road | 049/26/04 | SK Sri Tanjung | |
Wellesley School | 049/26/05 | SK Wellesley | |
Farquhar Street | 049/26/06 | SK Perempuan Island | |
Lorong Argus | 049/26/07 | St. Xavier's Institution | |
Muntri Street | 049/26/08 | SJK (C) Shih Chung Pusat | |
Kampong Malabar | 049/26/09 | SJK (C) Aik Hua | |
Lorong Serk Chuan | 049/26/10 | SK Hutchings | |
Lorong Pasar | 049/26/11 | SK Convent Lebuh Light | |
Esplanade | 049/26/12 | SMK Hutchings | |
Leboh Pasar | 049/26/13 | SMK Convent Lebuh Light | |
Leboh Ah Quee | 049/26/14 | SK Hutchings | |
பெங்காலான் கோத்தா (Pengkalan Kota) (N27) |
Leboh Presgrave | 049/27/01 | SJK (C) Heng Ee |
Jalan Magazine | 049/27/02 | SJK (C) Sum Min | |
Jalan Prangin | 049/27/03 | SJK (C) Sum Min | |
Leboh Victoria | 049/27/04 | SJK (C) Li Tek 'A' | |
Pengkalan Welf | 049/27/05 |
| |
Gat Leboh Noordin | 049/27/06 | Dewan Komuniti Maccalum | |
Jalan C.Y.Choy | 049/27/07 | Dewan Li Tek Seah | |
Macallum Street | 049/27/08 | SJK (C) Eng Chuan | |
Leboh Cecil | 049/27/09 | SJK (C) Eng Chuan | |
கொம்தார் (Komtar) (N28) |
Dickens Street | 049/28/01 | SJK (C) Hu Yew Seah |
Leboh Cintra | 049/28/02 | Taman Bimbingan Kanak-Kanak (Tabika) Nurul Islam | |
Kampung Kolam | 049/28/03 | Pusat Belia Lebuh Acheh | |
Leboh Acheh | 049/28/04 | Pusat Belia Lebuh Acheh | |
Leboh Melayu | 049/28/05 | SK Tan Sri P. Ramlee | |
Hong Kong Street | 049/28/06 | George Town World Heritage Inc | |
Komtar | 049/28/07 | Komtar Walk | |
Madras Lane | 049/28/08 | SJK (C) Hu Yew Seah | |
Jalan Timah | 049/28/09 | SK Tan Sri P. Ramlee | |
Jalan Lines | 049/28/10 | SK Tan Sri P. Ramlee | |
Jalan Dato' Kramat | 049/28/11 | The Penang Buddhist Association Kindergarten | |
Irving Road | 049/28/12 | Pusat Kegiatan Guru Kelawai | |
Jalan Pahang | 049/28/13 | The Penang Buddhist Association Kindergarten | |
Jalan Kim Bian Aik | 049/28/14 | Persatuan Leong See Kah Miew |
தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959–2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
ஜார்ஜ் டவுன் (George Town) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1959–1963 | தான் கோக் கின் (Tan Phock Kin) |
மலாயா மக்கள் சோசலிச முன்னணி |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1963–1964 | தான் போக் கின் (Tan Phock Kin) |
மலாயா மக்கள் சோசலிச முன்னணி |
2-ஆவது | 1964–1968 | லிம் சோங் இயூ (Lim Chong Eu) |
ஐக்கிய மக்களாட்சி கட்சி |
1968–1969 | கெராக்கான் | ||
1969–1971 | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது [8][9] | ||
3-ஆவது | 1971–1973 | லிம் சோங் இயூ (Lim Chong Eu) |
கெராக்கான் |
1973–1974 | பாரிசான் (கெராக்கான்) | ||
4-ஆவது மக்களவை | 1974–1978 | ||
5-ஆவது மக்களவை | 1978–1981 | ஓங் ஊங் கியாட் (Wong Hoong Keat) |
ஜனநாயக செயல் கட்சி |
1981–1982 | பாரிசான் (கெராக்கான்) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | கோ சு கூன் (Koh Tsu Koon) | |
7-ஆவது மக்களவை | 1986–1990 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | ||
9-ஆவது மக்களவை | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | சோவ் கோன் இயோ (Chow Kon Yeow) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நிங் வெய் அயிக் (Ng Wei Aik) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | சோவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) |
பாக்காத்தான் அரப்பான் (ஜசெக) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | லிம் உய் இயிங் (Lim Hui Ying) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
52,803 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
38,141 | 71.34% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
37,683 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
'72 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
386 | - |
பெரும்பான்மை (Majority) |
28,754 | 76.30% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
லிம் உய் இயிங் (Lim Hui Ying) |
பாக்காத்தான் | 31,968 | 84.83% | -2.42 ▼ | |
தான் கிம் நீ (Tan Kim Nee) |
பாரிசான் | 3,214 | 8.53% | -4.22 ▼ | |
இங் கூன் லெங் (H'ng Khoon Leng) |
பெரிக்காத்தான் | 2,501 | 6.64% | +6.64 |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P049 புக்கிட் பெண்டேரா (Tanjong) |
கம்போங் கோலாம் | ||||||
கொம்தார் | |||||||
கோத்தா | |||||||
பாடாங் கோத்தா | |||||||
பெங்காலான் கோத்தா | |||||||
தஞ்சோங் தெங்கா | |||||||
தஞ்சோங் உத்தாரா |
# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N26 | பாடாங் கோத்தா (Padang Kota) |
சோவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) |
பாக்காத்தான் (ஜசெக) |
N27 | பெங்காலான் கோத்தா (Pengkalan Kota) |
குய் சி சென் (Gooi Zi Sen) | |
N28 | கொம்தார் (Komtar) |
தே லாய் எங் (Teh Lai Heng) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)