தஞ்சோங் மாலிம் (P077) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Tanjong Malim (P077) Federal Constituency in Perak | |
மாவட்டம் | முவாலிம் மாவட்டம் பத்தாங் பாடாங் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 93,873 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தஞ்சோங் மாலிம் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பேராங், சிலிம், சுங்கை, பீடோர், துரோலாக் |
பரப்பளவு | 1,882 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சாங் லி காங் (Chang Lih Kang) |
மக்கள் தொகை | 122,947 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Malim; ஆங்கிலம்: Tanjong Malim Federal Constituency; சீனம்: 丹绒马林国会议席) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம் (Muallim District); பத்தாங் பாடாங் மாவட்டம் (Batang Padang District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P077) ஆகும்.[7]
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தஞ்சோங் மாலிம் நகரம், பேராக், முவாலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; மற்றும் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. இந்தத் தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும்.
இந்த நகரத்திற்கு அருகில் புரோட்டோன் சிட்டி (Proton City), பேராங், பேராங் 2020, சுங்கை, சிலிம் ரிவர் எனும் அதன் துணை நகரங்கள் உள்ளன. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நகருக்கு நவீன மயமான தொடருந்து சேவைகள், கூடுதலானச் சிறப்புகளை வழங்கி மேலும் சிறப்புச் செய்து வருகின்றன.
அண்மைய காலங்களில் தஞ்சோங் மாலிம் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. புதிய தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம், நவீன பேருந்து நிலையம், சீரமைக்கப் பட்ட சாலைகள், புதிய பள்ளிக்கூடக் கட்டிடங்கள், புதிய தஞ்சோங் மாலிம் மருத்துவமனை ஆகியவை உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து உள்ளது.
1922-ஆம் ஆண்டில் மலேசியாவின் முதல் கல்வி பயிற்சி நிலையம் இங்குதான் கட்டப்பட்டது. அதன் பெயர் சுல்தான் இட்ரிசு பயிற்சிக் கல்லூரி. அந்தக் கல்லூரி 1997-ஆம் ஆண்டில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என தகுதி உயர்வு பெற்றது.
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் பத்தாங் பாடாங் தொகுதியில் இருந்து தஞ்சோங் மாலிம் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P058 | 1959–1963 | லீ செக் பூன் (Lee Seck Fun) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P058 | 1963–1964 | லீ செக் பூன் (Lee Seck Fun) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P058 | 1971–1973 | லீ செக் பூன் (Lee Seck Fun) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |||
4-ஆவது மக்களவை | P063 | 1974–1978 | மாக் ஓன் காம் (Mak Hon Kam) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P071 | 1986–1990 | லோக் யுவென் இயூ (Loke Yuen Yow) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P074 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P077 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ஓங் கா சுவான் (Ong Ka Chuan) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சான் லீ காங் (Chang Lih Kang) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
93,873 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
70,928 | 74.22% | ▼ - 7.00% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
69,671 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
143 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,144 | ||
பெரும்பான்மை (Majority) |
3,541 | 5.08% | ▼ - 4.79 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
சாங் லி காங் (Chang Lih Kang) |
பாக்காத்தான் | 69,671 | 25,140 | 36.08% | - 9.36% ▼ | |
நோலி அசிலின் முகமது ரட்சி (Nolee Ashilin Mohammed Radzi) |
பெரிக்காத்தான் | - | 21,599 | 31.00% | + 31.00% | |
மா ஆங் சூன் (Mah Hang Soon) |
பாரிசான் | - | 20,963 | 30.09% | - 5.48 % ▼ | |
சமாலுதீன் முகமது ரட்சி (Jamaluddin Mohd Radzi) |
சுயேச்சை | - | 1,032 | 1.48% | + 1.48 % | |
அமீர் அம்சா அப்துல் ரசாக் (Amir Hamzah Abdul Rajak) |
தாயக இயக்கம் | - | 609 | 0.87% | + 0.87% | |
இசத் சொகாரி ( Izzat Johari) |
சுயேச்சை | - | 328 | 0.47% | + 0.47 % |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)