தடுப்பணை (check dam) என்பது நீர் ஓடும் ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் அணைகள் போன்ற கட்டிட அமைப்பாகும். இத்தடுப்பணைகள் நீரை சேமிப்பதற்கும், ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கும், நீரோட்டத்தின் திசை மாற்றி, தேவையான நிலப்பரப்புகளுக்கு நீரை கொண்டு செல்வதற்கும், நீரின் வேகத்தைக் குறைப்பதற்காகவும் கட்டப்படுகின்றன.
சிறிய நீர்த்தேக்கங்களையும் இந்தத் தடுப்பணைகள் உருவாக்குகின்றன. இத்தகைய தடுப்பணைகள் பத்து ஏக்கர் அளவில் நீர்ப்பாசன வசதி தரும் சிறிய ஓடைகளின் குறுக்கேயே கட்டப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோம்பையில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.[1]