தட்டேகெரே

தட்டேகெரே
Village
தட்டேகெரே ஏரி
ஆள்கூறுகள்: 12°40′20″N 77°34′24″E / 12.67209°N 77.57345°E / 12.67209; 77.57345
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
வட்டம்கனகபுரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அருகில் உள்ள நகரம்பெங்களூர்

தட்டெகெரே (Thattekere) என்பது கருநாடகத்தின், ராமநகர மாவட்டத்தில் கனகபுரா வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இதுபெங்களூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. இந்த ஊரானது 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 1293 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. [1] இந்த சிற்றூரானது அங்கு உள்ள ஏரியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலா தலமாகும், "தட்டே" என்றால் தட்டு மற்றும் "கெரே" என்பது கன்னடத்தில் ஏரி என்று பொருளாகும்.

இப்பகுதி பன்னேருகட்டா தேசியப் பூங்காவின் யானை வழித்தடத்தில் அமைந்துள்ளது. தட்டேகெரே ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு மகாதேசுவரர் கோயில் உள்ளது. இப்பகுதி பறவை நோக்கல் இடமாகும். [2] இந்த ஊருக்கு அருகில் மற்றொரு சுற்றுலா தலமான முத்யால மடுவு உள்ளது.

பின்னணியில் காடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thattekere Village Population - Kanakapura - Ramanagara, Karnataka".
  2. "Sell Used Car Online & Get Instant Payment - 𝗖𝗮𝗿𝗗𝗲𝗸𝗵𝗼 𝗚𝗮𝗮𝗱𝗶 𝗦𝘁𝗼𝗿𝗲".