தண்டுபாள்யா 2 | |
---|---|
திரைப்பட சுவரோட்டி | |
இயக்கம் | சீனிவாச ராசு |
தயாரிப்பு | வெங்கட் |
கதை | சீனிவாச ராசு |
இசை | அர்சுன் சயன்யா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வெங்கட் பிரசாத் |
படத்தொகுப்பு | சி. ரவிச்சந்திரன் |
கலையகம் | வெங்கட் மூவிசு |
வெளியீடு | சூலை 14, 2017 |
ஓட்டம் | 102 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
ஆக்கச்செலவு | ₹1.5 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹10.25 கோடி[1] |
தண்டுபாள்யா 2 (Dandupalya 2) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட மொழி குற்றப்புனைவுத் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்க, வெங்கட் தயாரித்தார். [2] தண்டுபாளையத்தைச் சேர்ந்த பிரபலமற்ற கொள்ளைக் கும்பல் குறித்த கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்டு, 2012 ஆம் ஆண்டு வெளியான தண்டுபாள்யா திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். இதன் முந்தைய படத்தைப் போலவே இப்படத்திலும் பூஜா காந்தி முதன்மை பாத்திரத்தை ஏற்று நடித்தார். [3] பிற முதன்மைப் பாத்திரங்களில் பு. ரவிசங்கர், சஞ்சனா, மகரந்த் தேஷ்பாண்டே, ஸ்ருதி, ரவி காலே ஆகியோர் நடித்துள்ளனர். [4] இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்க, வெங்கட் பிரசாத் ஒளிப்பதிவு செய்தார். படம் வெளியானதும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் வசூல் ஈட்டி வெற்றியைப் பெற்றது.
இப்படம் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தண்டுபாளையம் 2 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. [5] திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2016 மார்ச் 24 அன்று நடைபெற்ற நிலையில், திரையரங்க வெளியீடு 2017 சூலை 14 அன்று நடைபெற்றது. [6] 2017 ஆகத்தில் இப்பட்டத்தின் மூன்றாம் பகுதியை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட கும்பலானது சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. ஆய்வாளர் சலபதி அவர்களிடம் கவனமாக இருக்குமாறு சிறைக் கண்காணிப்பாளரை எச்சரிக்கிறார். இந்தியன் எக்சுபிரசு புலனாய்வுப் பத்திரிகையாளர் "அபி" என்னும் அபிவ்யக்தி முழு வழக்கையும் மீண்டும் விசாரிக்கத் தொடங்குகிறார். வழக்கில் சூழ்நிலை ஆதாரமும் இல்லை, கைரேகையின் அறிகுறிகளும் இல்லை, கற்பழிப்பு மற்றும் கொலைகளை உறுதிப்படுத்த விந்து சோதனைகள் எதுவும் இல்லை என்று வலியுறுத்துகிறார். அவர் உள்ளூர் பொற் கொல்லரிடம் விசாரணையைத் தொடங்குகிறார். திருடப்பட்டதாக நீதிமன்றத்தில் காட்டப்பட்ட ஆபரணங்கள் பொய்யான ஆதாரமாக தயாரிக்கபட்டன என்பதையும், சிங்கப்பூரில் இருந்து வந்த சாட்சியும் போலியானது என்பதையும் வெளிப்படுத்துகிறார். முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவு செய்யாமல் கும்பலை 40 நாட்கள் ஒரு தனி இடத்துக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு இரகசியத் தகவல்களையும் அவர் கண்டுபிடிக்கிறார். கொலை கும்பால் கொல்லபட்ட ஒருவரின் பெற்றோரை அவர் சந்திக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்களோ, அண்டை வீட்டாரோ பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். மேலும் அவர்கள் அந்தக் கும்பலே குற்றவாளிகள் என்று ஏன் நம்பினார்கள் என்று கேட்டதற்கு, காவல் துறையினர் கும்பலை அவர்களிடம் அழைத்துச் சென்று அவர்கள் எப்படி கொலை செய்தனர் என்பதை விளக்கினார்கள் என்று அவர்கள் பதிலளித்தனர். ஏழைகளான அந்தக் கும்பல் மீது வழக்குகள் பொய்யாக புனையப்பட்டன என்று அவர் முடிவுக்கு வருகிறார். துவக்கத்தில் செய்த முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகு, கும்பலை சிறையில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். இந்நிலையில் அவர்கள் மரண தண்டணையை நிறைவேற்ற வசதியாக மற்றொரு சிறைக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கே அவர் அப்பாவி தோற்றத்தில் உமேஷ் ரெட்டியை சந்திக்கிறார். கும்பல் அபியிடம் "தங்கள் கதையை" விவரிக்கிறது. காவல்துறை சித்திரவதைகளைப் பயன்படுத்தி தங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக கூறுகின்றனர்.
கும்பல் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை விளக்குகிறது: முன் பின் தெரியாத ஊருக்கு இடம்பெயர்வது, சாப்பிட உணவுகூட இல்லாமல், சேரிகளில் வாழ்வது, உணவுக்காக பிச்சை எடுப்பது, பலரால் நிராகரிக்கப்பட்டது, இதனால் சுற்றித்திரிகின்ற பன்றிகளை சாப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது. பின்னர் அவர்கள் கட்டுமான வேலைக்கு சேர்கிறார்கள். தண்டுபாளைய தொடர் கொலைகள் மற்றும் பலாத்காரம் நிகழும்போது, காவல் பலப்படுத்தப்பட்டாலும் குற்றங்களை கட்டுக்குள் வைக்க தவறியதற்காக ஆய்வாளர் மீது கணிசமான அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு, திரைப்படம் பார்த்துவிட்டு வரும் கும்பலைச் சேர்ந்த இருவரை ஆய்வாளர் வழிமறிக்கிறார் (தண்டுபாள்யா 1 இல் மாறு கண் பார்வை கொண்டவர் மற்றும் முதியவர்). அவர்கள் திரைப்படம்தான் பார்த்து வந்தார்கள் என்பதை நிரூபிக்க திரைப்பட நுழைவுச் சீட்டுகளைக் காட்டத் தவறும்போது அவர்களை அடிக்கிறார். பின்னர் அவர்களை வண்டியில் ஏற்றிச் சென்று அவர்களது சேரியில் இறக்கி விடுகிறார். அடுத்த நாள் இரவு, கொலையுடன் கூடிய திருட்டு நிகழ்வு ஒன்று நடக்கிறது. ஆய்வாளர் அந்த இடத்திற்கு வருகிறார். தன் மனைவியின் காலில் இரும்பு ஆணியால் ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கீழே கிடக்கும் ஒரு தங்க மோதிரத்தைத் திருடுகிறார். அவர் அதை உள்ளூர் நகைக் கடையில் விற்க முயற்சிக்கும்போது ஆய்வாளர் வந்து அவரை பிடிக்கிறார். அன்றிரவு, காவலர்கள் கும்பலின் மற்ற உறுப்பினர்களை பிடித்து ஒரு ஒதுக்குப்புற இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். கும்பலில் உள்ள பெண்ணை பாலியல் வல்லுறவு செய்வது உட்பட அவர்களை பலவிதமாக சித்திரவதை செய்கின்றனர். 40 நாட்களுக்குப் பிறகு இறுதியில், அவர்கள் "தாங்கள் செய்யாத" குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள்.
அபி பின்னர் காவல் துறையின் பலாத்காரம் மற்றும் தவறான ஆதாரங்களைப் பயன்படுத்துவதியதாகக் குற்றம் சாட்டி ஒரு கட்டுரையை அச்சிடுகிறார். ஆய்வாளர் அபியைச் சந்திக்கிறார், படம் தொடர்கிறது என முடிகிறது.
படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்தார்.
பாடல் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஜனனா சரி சமா" | அஸ்வின் | 2:48 |
பாடல் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஜனனம் ஒக்க கதா" | அஸ்வின் | 2:48 |
படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் வழங்கியது. 2 என்ற தலைப்புடன் 2017 சூலை 14 அன்று கர்நாடகம் முழுவதும் படம் வெளியிடப்பட்டது. [8] தெலுங்கு பதிப்பு ஒரு வாரம் கழித்து, 2017 சூலை 21 அன்று வெளியானது. [9]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)