தனி ஒருவன் | |
---|---|
இயக்கம் | எம். ராஜா |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ். அகோரம் கல்பாத்தி எஸ். கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் |
கதை | எம். ராஜா சுபா |
இசை | கிப்கொப் தமிழா [1] |
நடிப்பு | ஜெயம் ரவி அரவிந்த் சாமி நயன்தாரா வம்சி கிருஷ்ணா |
ஒளிப்பதிவு | ராம்ஜி[2] |
படத்தொகுப்பு | கோபிகிருஷ்ணா. வி |
கலையகம் | ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்[3] |
வெளியீடு | 28 ஆகஸ்ட் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தனி ஒருவன் (Thani Oruvan) என்பது 2015 ஆகத்து 28 அன்று எம். ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.[1] இப்படத்திற்கு கிப்கொப் தமிழா இசையமைத்துள்ளார்.[3] இத்திரைப்படம், இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மீளுருவாக்க திரைப்படங்களாகும்.
சன் பிக்சர்சு இப்படத்தை வினியோகிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. செயம் ரவியின் தொடர் தோல்விப்படங்களாலும் இப்படத்தை பற்றிய எதிர்மறையான செய்திகளாலும் படத்தை விநியோகிப்பதில் இருந்து விலகிக்கொண்டது. இப்படத்தின் தொலைக்காட்சி (சாட்டிலைட்) உரிமையை சன் டிவி பெற்றது [4]
தனி ஒருவன் 10நாட்களில் உலகம்முழுவதிலுமிருந்து ₹51.08 கோடியை வசூல் செய்தது.[5] முதல் வாரத்தில்₹1.28 கோடியை வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இரண்டாவது வார முடிவில் இப்படம் சென்னையில் ₹1.06 கோடியை வசூலித்திருந்தது . பதினெட்டு நாட்கள் முடிவில் மொத்தமாக இப்படம் ₹74.86 கோடியை வசூலித்திருந்தது.[6]
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)