தனி ராம் சத்திரிக் | |
---|---|
தனி ராம் சத்திரிக்கின் உருவப்படம் | |
பிறப்பு | சேய்க்குப்புரா, பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) | 4 அக்டோபர் 1876
இறப்பு | 18 திசம்பர் 1954 | (அகவை 78)
மொழி | பஞ்சாபி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | லோபோக்கு, பதோனியல்லி மற்றும் இஸ்லாமிய பள்ளி, அமிருதசரசு[1] |
தனி ராம் சத்ரிக் (4 அக்டோபர் 1876 - 18 டிசம்பர் 1954) ஒரு இந்திய கவிஞரும் அச்சுக்கலைஞரும் ஆவார். [1] [2]
நவீன பஞ்சாபி கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பஞ்சாபி கலாச்சாரம், மொழி மற்றும் புத்தகவெளியீடுகளை மேம்படுத்தினார். 1926இல், பஞ்சாபி இலக்கிய சங்கமான பஞ்சாபி சாஹித்து சபாவின் தலைவர் ஆனார்.
அவர் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள சேய்க்குபுரா மாவட்டத்தில் பாசியன்-வாலா கிராமத்தில் பிறந்தார்.[3] அவரது தந்தை போஹு லால்[3] சாதரணமான ஒரு கடைக்காரராக இருந்தார்.[4] அவரது தந்தை வேலை தேடி லோபோக்கு கிராமத்துக்கு சென்றார். தந்தையால் அவருக்கு குர்முகி மற்றும் உருது எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டன.[1] தனி ராமுக்கு [[வனப்பெழுத்து|வனப்பெழுத்தில்]] ஈடுபாடு அதிகமாகவே, அவர் குர்முகி அச்சுக்கலை கற்க பம்பாய் சென்றார்.[1] [3] பிறப்பால் இந்துவாக இருப்பினும், அக்காலத்தின் பிரபல பஞ்சாபி கவிஞரான வீர் சிங்குடன் தொடர்பு கொண்ட பிறகு அவர் சீக்கியமத நம்பிக்கையின் அபிமானி ஆனார்.[1] [3] இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் பஞ்சாபிமொழி வசனங்களை எழுதத் தான் தூண்டப்பட்டதை உணர்ந்தார்.[1]