தனிமை அண்டம் ( Field galaxy ) எனப்படுவது ஓர் அண்டம் பெரிய அண்டக் கொத்துகளைச் சாராமல் தனித்து ஈர்ப்பு விசையுடன் காணப்படுவதைக் குறிக்கிறது.
5 மெகா புடைநொடி தொலைவுக்குள் காணப்படும் பெரும்பாலான தோராயமாக 80 சதவீதம் அண்டங்கள், அண்டக் குழுக்களாகவோ அண்டக் கொத்துகளாகவோதான் காணப்படுகின்றன[1].
மிகக்குறைந்த மேற்பரப்பும் , பிரகாசமும் கொண்ட அண்டங்களாகத் தனிமை அண்டங்கள் உள்ளன[2].