தன்சானியா தேசிய துடுப்பாட்ட அணி (Tanzania national cricket team) சர்வதேச கிரிக்கெட்டில் தன்சானியாவின் ஐக்கிய குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். துடுப்பாட்டம் தன்சானியாவில் 1890ல் இருந்து விளையாடப்படுகிறது.தன்சானியா தேசிய அணி தனது முதல் சர்வதேச போட்டியை 1951 இல் விளையாடியது. [1] 2001 ஆம் ஆண்டில் தன்சானியா கிரிக்கெட் சங்கம் சர்வதேச துடுப்பாட்ட அவையின் (ஐ.சி.சி.) ஒரு உறுப்பினராக ஆனது, [2]. முன்னர் இது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க கிரிக்கெட் அவையின் ஒரு பகுதியாக இருந்தது.