தன்னுந்தி வாகனங்கள் சட்டம் 1988 | |
---|---|
இயற்றியது | Parliament of India |
தன்னுந்தி வாகனங்கள் சட்டம், 1988 (The Motor Vehicles Act,1988) என்பது சாலை இடப்பெயர்ப்பு வாகனங்களின் அனைத்து பண்புகூறுகளையும் கட்டுப்படுத்துவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமூலம் ஆகும். இது 1989 சூலை முதல் நாளில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இது இத்தகைய முதல் இயற்றுச்சட்டமான தன்னுந்தி வாகனங்கள் சட்டம், 1914-ற்கு மாற்றீடாக கொண்டுவரப்பட்ட தன்னுந்தி வாகனங்கள் சட்டம், 1939-ற்கு மாற்றீடு செய்யப்பட்டதாகும்.[1] இந்தச் சட்டம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் பெறுதல், தன்னுந்தி வாகனங்களின் பதிவு, இசைவளிப்பதன் வாயிலாகத் தன்னுந்தி வாகனங்களைக் கட்டுப்படுத்தல், அரசு ஏற்றெடுப்பிற்கான சிறப்பு ஏற்பாடுகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், காப்பீடு, கடப்பொருப்பு, குற்றங்கள் மற்றும் தண்டனைகள், ஏனைய பற்றி விரிவான சட்டவாக்க ஏற்பாடுகளைத் தருகிறது. இந்தச் சட்டமூலத்தின் சட்டவாக்க ஏற்பாடுகளைச் செயலாற்றுவதற்கு, இந்திய அரசு நடுவண் தன்னுந்தி வாகனங்கள் நெறிமுறைகள் 1989-யை உருவாக்கியுள்ளது.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)