தன்மாத்திரைகள் அல்லது தத்துவங்கள், உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் உபநிடதம் மற்றும் சாங்கியத்தின் எண்ணக்கருக்களில் ஒன்று ஆகும். சீவராசிகள் மற்றும் பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்களைத் தத்துவங்கள் எனப்படுகிறது. இந்த தன்மாத்திரைகள் சாங்கியத்தில் பிரகிருதி, புருச தத்துவம், மஹத் உள்ளிட்ட 25 தன்மாத்திரைகள் என்றும்[1], வேதாந்தத்தில் தன்மாத்திரைகள் எண்ணிக்கை 26 என்றும் கூறுகிறது.[2]உபநிடதம் கூறும் பிரம்மம் அல்லது ஆத்மா மற்றும் மாயை எனப்படும் சீவராசிகள் மற்றும் பிரபஞ்சம் அல்லது சாங்கியம் கூறும் புருடன் மற்றும் பிரகிருதி எனப்படும் இரண்டு தத்துவங்களுடன் 5 ஐம்பூதங்கள்[3], 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், மூவுடல்கள், முக்குணங்கள் மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய 4 அந்தக்கரணங்களையும்,[4] சுவை, ஒளி, ஊறு (தொடுகை), ஓசை, நாற்றம் (மணம்) ஆகியவையும் சேர்த்து 33 தன்மாத்திரைகள் என அழைப்பர்.
உபநிடதங்களில் பிரம்மம் அல்லது ஆத்மா மற்றும் மாயை எனப்படுவதை, சாங்கியத்தில் புருச தத்துவம், பிரகிருதி மற்றும் மஹத் எனப்படுகிறது.
சீவராசிகள் மற்றும் பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனது.