தன்யாசி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின்ஜன்னிய இராகம் ஆகும். காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1), ஆகிய சுரங்கள் வருகின்றன.
↑டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.