தபதி | |
---|---|
வகை | தேவி, ஆற்றின் தெய்வம் |
இடம் | சூரியலோகம் |
மந்திரம் | ஓம் சூர்யபுத்ரி மா தபதி நமஹ: |
துணை | சம்வர்ணன் |
பெற்றோர்கள் | சூரிய தேவன் (இந்து சமயம்)-சாயா |
சகோதரன்/சகோதரி | சனீஸ்வரன், பத்ரா, யமி, யமன், அஸ்வினிகள் |
குழந்தைகள் | குரு |
தபதி (Tapati; சமக்கிருதம்: तपती ) என்பது இந்து மதத்தில் இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படும் ஒரு தெய்வம். அவள் தபதி நதியின் தெய்வம் என்றும், தெற்கின் தாய்-தெய்வம் (சூரியனின் வீடு) என்றும் அழைக்கப்படுகிறாள், அங்கு அவள் பூமிக்கு வெப்பத்தைக் கொண்டு வருகிறாள். சில இந்து நூல்களின்படி, தபதி சூரியனின் மனைவிகளில் ஒருவரானசாயாவின் மகளாவார்.[1]
தபதி என்ற பெயர் "வெப்பமயமாதல்", "சூடான ஒன்று", "எரியும் ஒன்று" என்று பொருள்களைத் தரும். தபதியின் அழகிலும், சரியான அம்சங்களிலும், கடுமையான மத சுய ஒழுக்கத்திலும் மூன்று உலகங்களிலும் தபதிக்கு நிகரானவர்கள் யாரும் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது.[2] இந்த பெயர் சிதியன் கடவுள்களின் அரசியான தாப்தி என்ற பெயருடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது [3] [4], மேலும் பண்டைய புரோட்டோ-இந்தோ-ஈரானிய மதத்தில் முதலில் மேலாதிக்கம் செலுத்தி வந்த ஒரு தீ தெய்வத்திலிருந்து தோன்றி வந்திருக்கலாம். [5]
தபதி முதலில் மகாபாரதத்தில் இருபத்து நான்கு முறை, சம்வரனாவின் மனைவியாகவும், குரு வம்சம் மற்றும் குரு இராச்சியத்தின் நிறுவனரான குருவின் தாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார், . ஸ்ரீமத்- பகவதம் & புராணம் போன்ற பிற இந்து நூல்களிலும் இரு கதாபாத்திரங்களின் கதையும் காணப்படுகிறது. இந்த நூல்களின்படி, தபதியின் வீடு தபதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [6] [7]
மகாபாரதத்தில், தாபத்யா என்ற பெயரின் தோற்றம் குறித்து அர்ஜுன் காந்தர்வரிடம் கேட்டார், எனவே காந்தர்வர், சூரியனுக்கு தபதி என்ற அழகான மகள் இருப்பதாகக் கூறினார், அவரை திருமணம் செய்து கொள்ள அவர் அக்கறை கொண்டிருந்தார்.
ஆரம்பகாலத்தில் சூரியனை வழிபட்டு வந்த சாமவரனா என்ற கௌரவ மன்னன் தபதிக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் வேட்டையாடுவதற்காக சாமவரனா காட்டிற்குச் சென்றார். அங்கு தபதியைப் பார்த்து காதல் கொண்டு திருமணத்தை முன்மொழிகிறார், ஆனால் தபதியோ தனது தந்தையின் ஒப்புதலுக்காக சாமவரானாவுக்குத் தன் தந்தையை முன்மொழிகிறாள்.
அதன் பின்னர் மன்னன் சூரிய வழிபாட்டினைத் தொடங்கினார். பிறகு வசிஷ்ட முனவரின் உதவியை நாடி, சூரியனிடம் அவரை அனுப்பி வைக்கிறார். வசிஷ்டர் சாமவரனாவுக்கும் தபதிக்கும் திருமணம் செய்துவிக்க வேண்டுகிறார். சூரியன் வசிட்டரின் கோரிக்கையை ஏறு இவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கிறார். [8]
இந்து மத நூல்களின் படி, தபதி அவரது பக்திக்காகப் புகழ்பெற்றவர். மேலும் இவரது அழகு, இயல்பான குணங்கள், வேத அறிவு ஆகியவற்றில் தபதிக்கு இணையான தெய்வமோ, அரக்கரோ,அரம்பையரோ, கந்தர்வரோ கிடையாது எனக் குறிப்பிடப்படுகிறார்.[9]
தபதிக்கு அநேகமாக தபதியின் பெயரிடப்பட்டிருப்பதால், மக்கள் அவளை ஒரு தெய்வத்தின் வடிவத்திலும், இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கியமான போற்றத்தக்க குணங்களைக் கொண்ட ஒரு முக்கியமான நதியாகவும் வணங்குகிறார்கள். [10]
தபதியைப் பற்றி குறிப்பிடும் இந்து நூல்களின்படி, தபதிக்கு பின்வரும் உறவினர்கள் உள்ளனர்: சூர்யனை தனது தந்தையாகவும், சாயாவைத் தனது தாயாகவும் கொண்டவர்; அவர் சம்வரனாவின் மனைவியாகவும், குருவின் தாயாகவும் இருக்கிறார், அவருக்கு யமி , பத்ரா என்ற இரு தங்கைகளும், சனி, யமன் என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர் [11] [12]
கௌரவ மன்னர் சாமவரனா, தபதி ஆகிய இரு புராணக் கதாப்பாத்திரங்கள் பற்றிய பல நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன.அவற்றுள் கூடியாட்டம், தபதிசாமவரனா ஆகிய நாடகங்கள் கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. [13]