அடைபெயர் | தமிழ்ப் புலிகள் | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் | ||
கண்ட கூட்டமைப்பு | கொனிஃபா உலக ஒற்றுமைக் காற்பந்து கூட்டணி | ||
தலைமைப் பயிற்சியாளர் | ராகேசு நம்பியார் | ||
அணித் தலைவர் | பனுசாந்து குலேந்திரன் | ||
அணியின் துணைத் தலைவர் | பிரசாந்த் ராகவன் | ||
Most caps | கவிந்தன் நவநீதகிருட்டிணன் பிரசாந்த் ராகவன் (15) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பிரசாந்த் ராகவன் (12) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
இரேத்சியா 1 – 0 தமிழீழம் (எர்பில், ஈராக்; சூன் 5, 2012) | |||
பெரும் வெற்றி | |||
தமிழீழம் 10 – 0 தார்பூர் (சாப்மி, சுவீடன்; சூன் 7, 2014) | |||
பெரும் தோல்வி | |||
ஈராக்கிய குர்திஸ்தான் 9 – 0 தமிழீழம் (சாப்மி, சுவீடன்; சூன் 3, 2012) | |||
கொனிஃபா உலகக் காற்பந்து கிண்ணம் | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2014 இல்) | ||
சிறந்த முடிவு | 11-ஆவது (2014) | ||
இணையதளம் | தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் |
தமிழீழத் தேசியக் கால்பந்தாட்ட அணி (Tamil Eelam National Football Team) என்பது தமிழீழத்தின் சார்பாக தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் 2012 ஆம் ஆண்டில் உருவாக்கிய கால்பந்தாட்ட அணியாகும். இவ்வணியில் கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணி ஐக்கிய நாடுகள், மற்றும் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு (ஃபீஃபா) ஆகியவற்றின் அங்கீகாரம் பெறாதது, ஆனாலும், 2012 ஆம் ஆண்டில் இருந்து புதிய கூட்டமைப்பு வாரியத்தில் (Nouvelle Fédération-Board, NFB) முழுமையான உறுப்புரிமை பெற்றுள்ளது.[1] தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் சுயாதீன காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பில் (கொனிஃபா) உறுப்புரிமை கொண்டுள்ளது. 2020 மார்ச் நிலவரப்படி, தமிழீழ அணி கொனிஃபா உலகத் தரவரிசையில் 16-ஆவதாக உள்ளது.[2]
2012 ஆம் ஆண்டில் ஈராக்கிய குர்திஸ்தானின் எர்பில் நகரில் நடைபெற்ற 2012 வீவா உலகக்கோப்பை போட்டியில் இது முதன் முதலாகப் பங்குபற்றியது. தமிழீழ அணி இவ்வாறான ஒரு பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியது இதுவே முதற்தடவையாகும்.[3]
தமிழீழ கால்பந்துக் கழகம் 2012 ஏப்ரல் 8 இல் உலக தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது.[4] தமிழீழ தேசிய கால்பந்து அணி தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை குர்திஸ்தானில் நடைபெற்ற 2012 வீவா உலகக்கோப்பையுடன் ஆரம்பித்தது. இப்போட்டியில் இவ்வணி 7வது இடத்தைப் பிடித்தது.[5][6] இவ்வணி பின்னர் 2013 சூலையில் மாண் தீவில் நடைபெற்ற டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டித் தொடரில் பங்குபற்றி 3வது இடத்தைப் பிடித்தது.[7][8][9] சூன் 2014 இல் தமிழீழ அணி சுவீடன் சாப்மி பிரதேசத்தில் நடைபெற்ற கொனிஃபா உலகக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றியது.[10][11][12] 2023 ஆகத்து 3 முதல் ஆகத்து 8 வரை லிசுபனில் நடைபெற்ற முதலாவது கொனிஃபா ஆசியக் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் போட்டியில் தமிழீழ அணி உமாங்கு அணியை 3:1 என்ற கணக்கில் வென்று ஆசியக் கோப்பையை வென்றது.[13]
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் முயற்சியால் தமிழீழம் சார்பாக போட்டியிட தமிழீழ அணி உருவாக்கப்பட்டது. இவ்வணியில் கனடா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழீழ காற்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர். தமிழீழ அணியின் முதலாவது ஆட்டம் 2012 சூன் 5 ஆம் நாள் ரேத்சியா அணிக்கு எதிராக இடம்பெற்றது. பன்னாட்டுப் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியை 2012 சூன் 9 ஆம் நாள் ரேத்சியா அணிக்கு எதிரான போட்டியில் (4-0) பதிவு செய்து கொண்டது.
வீவா உலகக்கோப்பை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | நிலை | விஆ | வெ | ச | தோ | அகோ | எகோ |
2012 | 7வது | 4 | 1 | 0 | 3 | 4 | 11 |
மொத்தம் | சிறந்தது: 7வது | 4 | 1 | 0 | 3 | 4 | 11 |
வீவா உலகக்கிண்ண வரலாறு | |||
---|---|---|---|
ஆண்டு | சுற்று | கோல் | முடிவு |
2012 | |||
குழு ஆட்டம் | தமிழீழம் 0 – 1 இரேத்சியா | தோல்வி | |
குழு ஆட்டம் | தமிழீழம் 0 – 3 சான்சிபார் | தோல்வி | |
5ம்-8ம் இடங்களுக்காக | தமிழீழம் 0 – 7 ஒக்சித்தானியா | தோல்வி | |
7ம் இடத்துக்காக | தமிழீழம் 4 – 0 இரேத்சியா | வெற்றி |
தமிழீழ அணிக்காக பின்வரும் வீரர்கள் விளையாடினார்கள்:
பெயர் | இல. | நிலை | நாடு | அணி | கோல் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
ஹரீந்திரன், செல்வானந்தன் | 1 | GK | ஐக்கிய இராச்சியம் | வல்வை புளூஸ் | 0 | |
ஜெயசிங்கம், சஞ்சீவ் | 14 | MF | கனடா | கிலென்பூர்க் நோபில்டன் | 0 | |
கந்தவனம், புஷ்பலிங்கம் | 5 | DF | கனடா | கனடிய தமிழ் கால்பந்துக் கழகம் | 0 | |
நகுலேந்திரன், மேனன் | 12 | MF | கனடா | ஸ்கார்பரோ ரேஞ்சர்சு | 3 | |
நல்லதம்பி, பிரவீன் | 9 | MF | சுவிட்சர்லாந்து | அஃபொல்டேர்ன் | 0 | |
நல்லையா, ரதீஷ் | 15 | MF | ஐக்கிய இராச்சியம் | கிழக்கு இலண்டன் எலீட் | 0 | |
நம்பியார், மாகி | 10 | MF | ஐக்கிய இராச்சியம் | வாட்ஃபோர்டு அகாதமி | 0 | |
நம்பியார், ராகேஷ் | 3 | DF | ஐக்கிய இராச்சியம் | சான்டோஸ் | 0 | |
பிரேம்குமார், கஜன் | 8 | MF | ஐக்கிய இராச்சியம் | மகாஜனா | 0 | |
சடாச்சரலிங்கம், ஜனார்த்தன் | 17 | MF | கனடா | ஸ்கார்பரோ அசூரி புளூஸ் | 0 | |
சிறீ, ரோஷ் | 11 | FW | ஐக்கிய இராச்சியம் | சன்ரைசு | 1 | |
தவராஜா, கிருஷாந்த் | 6 | MF | சுவிட்சர்லாந்து | எஃப்சி சக் | 0 | |
வைரவமூர்த்தி, லக்சுமன் | 4 | DF | ஐக்கிய இராச்சியம் | யூனியன் எஃப்சி | 0 | |
விக்னேசுவரராஜா, அருண் | 13 | DF | கனடா | யோர்க் பிராந்திய ஷூட்டர்சு | 0 | |
ரவீதரன், வினோஜன் | 7 | FW | சுவிட்சர்லாந்து | சென். காலென் | 0 |
2013 சூலை 4 முதல் சூலை 7 வரை மாண் தீவில் இடம்பெற்ற ஃபீஃபாவினால் அங்கீகரிக்கப்படாத நாடுகள் பங்குபற்றிய டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றியது. இப்போட்டித்தொடரில் மாண் தீவு, இரேத்சியா, அல்டேர்னி, ஒக்சித்தானியா, சீலாந்து வேள்புலம், ஆகிய கால்பந்து அணிகளுடன் தமிழீழக் காற்பந்து அணியும் மோதியது.[14][15][16] சீலாந்துடனான முதலாவது ஆட்டத்தில் 5-3 என்ற இலக்குக் கணக்கில் தமிழீழ அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஒக்சித்தானியாவுடன் மோதி 0-5 என்ற இலக்குக் கணக்கில் தோற்றது. ஆனாலும், இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்துக்காக இடம்பெற்ற போட்டியில் இரேத்சியாவுடன் விளையாடி அவ்வணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.[17]
கொனிஃபா உலகக் காற்பந்து கிண்ணம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | நிலை | விஆ | வெ | ச | தோ | அகோ | எகோ |
2014 | 11வது | 4 | 1 | 0 | 3 | 12 | 15 |
மொத்தம் | சிறந்தது: 11வது | 4 | 1 | 0 | 3 | 12 | 15 |
கொனிஃபா வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நாள் | அரங்கு | கோல் | முடிவு | ||
2014[18] | |||||||
சுற்று 1 (குழு ஏ) | 2 சூன் 2014 | சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் | தமிழீழம் | 0 – 2 | அராமியன் சீரியாக்கு | தோல்வி | |
சுற்று 1 (குழு ஏ) | 3 சூன் 2014 | சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் | தமிழீழம் | 0 – 9 | ஈராக்கிய குர்திஸ்தான் | தோல்வி | |
முதல் சுற்றுக்காக | 5 சூன் 2014 | சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் | தமிழீழம் | 2 – 4 | சாப்மி | தோல்வி | |
இரண்டாம் சுற்றுக்காக | 7 சூன் 2014 | சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் | தமிழீழம் | 10 – 0 | தார்பூர் | வெற்றி |