தமிழ் மாநில காங்கிரசு (சுருக்கமாக : தமாகா Tamil Maanila Congress) அல்லது மூப்பனார் காங்கிரஸ் என்று அழைக்கப்படும். இக்கட்சியானது 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழககாங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]இக்கட்சி மீண்டும் 2014ல் ஜி.கே.வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டது.
அதனால் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் அதிமுகவில்ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்கட்சியை போல் நடத்தி வந்ததாலும் ஜெயலலிதா தமிழக காங்கிரஸ் தலைவர்களை அவமதித்து பேசிவந்ததாலும் காங்கிரசு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் அதிருப்தி அடைந்த நிலையில் எதிர் கட்சியான திமுகவுடன்காங்கிரஸ் கூட்டணி அமைக்கவேண்டும். என நரசிம்மராவிடம் கேரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கு முந்தைய (1989–1991) திமுக முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியை ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவை வைத்து 1991ல் அநியாயமாக திமுக ஆட்சியை அன்றைய பிரதமர் சந்திரசேகர் மூலம் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கலைத்தார்.
அதனால் கோபமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியினர் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை திமுகவினரால் தாக்கப்பட்டனர். குறிப்பாக திமுக ஆட்சி கலைக்கபட காரணமாக இருந்த ராஜீவ் காந்தி கொடும்பாவிகளை எறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக அப்போது தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு நடந்த நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்ய வந்த தலைவர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைக்கு திமுகவின் தலைவரும் அன்றைய முன்னாள் முதல்வருமான கருணாநிதி உதவினார். என்ற காரணத்தால் திமுகவிடம் கடுமையான எதிர்ப்பை காட்டிய அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த சோனியா காந்தி மற்றும் பிரதமர் நரசிம்ம ராவ்திமுகவுடன் கூட்டணிக்கு உடன்படாமல் தொடர்ந்து அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று கூறினார்.
அதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் சோனியா காந்தியின் உருவ கொடும்பாவி பொம்மைகள் எறிக்கப்பட்டது.
அதன் பிறகு அக்கூட்டணியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் ஒரு பிரிவினர்கள் மற்றும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜி. கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
பின்பு நடந்த 1996 சட்டமன்ற/நாடளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆனது பத்திரிகை நிருபர் சோ இராமசாமி அவர்கள் சிபாரிசால் அமைந்தது.[சான்று தேவை]
இதை அடுத்த அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தமிழகத்தில் திமுக–தமாகா ஆட்சிக்கு ஆதரவளித்தது.
ஜனதா தளம் கட்சியின் மற்றோரு மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் 1997ல் பிரதமர் ஆன போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததை அடுத்து அதில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணமான விடுதலைப் புலிகள் தற்கொலை படைக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உதவினார். என்ற காரணம் குறிப்பிடபட்டு இருந்ததால்.
அதை காரணம் காட்டி ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த காங்கிரஸ் தலைவர்களான சீதாராமன் கேசரி மற்றும் சோனியா காந்தி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த திமுக அரசு வெளியேற்றபடவேண்டும் என்று கூறினார்.
ஆனால் பிரதமர் ஐ. கே. குஜ்ரால்திமுக அரசை வெளியேற்ற மறுத்ததால். காங்கிரஸ் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் 1998ல் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு மத்தியில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுகவில்ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் மத்தியில் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்ததால்.
அதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக-பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்.
2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதியில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.
2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். 2002ல் தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.
2016 சட்டமன்ற தேர்தலில்தமாகா தலைவர் ஜி. கே. வாசன் அவர்கள் அதிமுகவில்ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போட்டியிடும் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். என்ற நிபந்தனையால் அக்கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து.
அதற்கு அப்போது அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெறிவித்த போதிலும் அப்போது அதிமுக கூட்டணியிலிருந்த மற்றோரு கூட்டணி கட்சியான பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம்பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதையடுத்து ஜி. கே. வாசன் அதற்கு உடன்படாமல் முழுமையாக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகினார்.