| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1] 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவுபட்டது.தேசிய அளவில் தேவராஜ் அர்ஸ் தலைமையில் அர்ஸ் காங்கிரசு, மாநில அளவில் குமரி ஆனந்தன் காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[3]
தேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[6][7]
கூட்டணி | கட்சி | வாக்குகள் | வாக்கு % | போட்டியிட்ட இடங்கள் | வென்ற இடங்கள் | மாற்றம் |
---|---|---|---|---|---|---|
அதிமுக இடங்கள்: 162 மாற்றம்: +14 வாக்குகள்: 9,328,839 வாக்கு %: 48.92% |
அதிமுக | 7,303,010 | 38.75% | 177 | 129 | ▼1 |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 596,406 | 3.16% | 16 | 11 | ▼1 | |
இந்திய கம்யூனிஸ்ட் | 501,032 | 2.66% | 15 | 9 | 4 | |
காந்தி காமராஜ் காங்கிரசு | 322,440 | 1.71% | 10 | 6 | 6 | |
ஃபார்வார்ட் ப்ளாக் | 65,536 | 0.35% | 2 | 1 | — | |
அர்ஸ் காங்கிரசு | 52,119 | 0.28% | 3 | 0 | — | |
சுயேட்சைகள் | 488,296 | 2.59% | 13 | 6 | 6 | |
திமுக இடங்கள்: 69 மாற்றம்: -6 வாக்குகள்: 8,371,718 வாக்கு %: 44.43% |
திமுக | 4,164,389 | 22.10% | 112 | 37 | ▼11 |
இந்திரா காங்கிரசு | 3,941,900 | 20.92% | 114 | 31 | 4 | |
சுயேட்சைகள் | 265,429 | 1.41% | 8 | 1 | 1 | |
மற்றவர்கள் இடங்கள்: 3 மாற்றம்: -8 |
ஜனதா கட்சி (ஜே.பி) | 522,641 | 2.77% | 95 | 2 | ▼8 |
சுயேட்சைகள் | 598,897 | 3.18% | 446 | 1 | — | |
மதசார்பற்ற ஜனதா கட்சி (ம.ஜ.க) | 2,335 | 0.01% | 1 | 0 | — | |
ஜனதா கட்சி (பொம்மை) | 762 | 0.00% | 3 | 0 | — | |
மொத்தம் | 13 கட்சிகள் | 18,845,006 | 100% | — | 234 | — |
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
1980 தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம்