தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதாகும்.[1][2] இந்தத் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது[3]
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகள் ஆகியவை அடங்கும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,620 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன.[4][5]
அக்டோபர் 1996 இல் தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் அமைப்புகளுக்கு முதல் தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 2001 மற்றும் அக்டோபர் 2006 இல் அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்பட்டன.[6] அக்டோபர் 2011 - 17, அக்டோபர் 2011 மற்றும் 19 அக்டோபர் 2011 அன்று நடைபெற்ற இரண்டு கட்டங்களில் உள்ளூர் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.[7]
வ. எண் | மாநகராட்சி | வெற்றியாளர் | அரசியல் கட்சி | இரண்டாமிடம் | அரசியல் கட்சி |
---|---|---|---|---|---|
1 | பெருநகர சென்னை மாநகராட்சி | சைதை சா. துரைசாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி) | திராவிட முன்னேற்றக் கழகம் |
2 | கோயம்புத்தூர் மாநகராட்சி | செ. மா. வேலுச்சாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | என். காரத்திக் | திராவிட முன்னேற்றக் கழகம் |
3 | மதுரை மாநகராட்சி | வி. வி. ராஜன் செல்லப்பா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | பி. பாக்கியநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
4 | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி | ஏ. ஜெயா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ஜெ. விஜயா ஜெயராஜ் | திராவிட முன்னேற்றக் கழகம் |
5 | சேலம் மாநகராட்சி | எஸ். சவுண்டப்பன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | டி. கலை அமுதன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
6 | திருநெல்வேலி மாநகராட்சி | விஜிலா சாத்தியநாத் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | எஸ். அமுதா | திராவிட முன்னேற்றக் கழகம் |
7 | ஈரோடு மாநகராட்சி | மல்லிகா பரமசிவம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ஏ. செல்லப்பொன்னி மனோகரன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
8 | திருப்பூர் மாநகராட்சி | ஏ. விசாலாட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | கே. செல்வராஜ் | திராவிட முன்னேற்றக் கழகம் |
9 | வேலூர் மாநகராட்சி | பி. கார்த்தியாயினி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ஆர். இராஜேஸ்வரி | திராவிட முன்னேற்றக் கழகம் |
10 | தூத்துக்குடி மாநகராட்சி | சசிகலா புஷ்பா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | பொன் இனிதா | திராவிட முன்னேற்றக் கழகம் |
அரசியல் கட்சி | மாநகர மேயர் | மாநகராட்சி வார்டு உறுப்பினர் | நகராட்சித் தலைவர் | நகராட்சி வார்டு உறுப்பினர் | பேரூராட்சித் தலைவர் | பேரூராட்சி வார்டு உறுப்பினர் |
---|---|---|---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 10 | 584 | 89 | 1,681 | 285 | 2,855 |
பாரதிய ஜனதா கட்சி | 0 | 4 | 2 | 37 | 13 | 181 |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | 0 | 4 | 0 | 10 | 2 | 33 |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 0 | 3 | 2 | 20 | 5 | 101 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 0 | 130 | 23 | 963 | 121 | 1,819 |
இந்திய தேசிய காங்கிரசு | 0 | 17 | 0 | 165 | 24 | 381 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 0 | 11 | 1 | 49 | 7 | 82 |
பாட்டாளி மக்கள் கட்சி | 0 | 2 | 0 | 60 | 2 | 108 |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 0 | 8 | 2 | 121 | 3 | 390 |
சுயேட்சைகள் | 0 | 55 | 5 | 553 | 64 | 1996 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)