தம்பின் (P133) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Tampin (P133) Federal Constituency in Negeri Sembilan | |
தம்பின் மக்களவைத் தொகுதி (P133 Tampin) | |
மாவட்டம் | தம்பின் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 81,534 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | தம்பின் தொகுதி |
முக்கிய நகரங்கள் | தம்பின், ஆயர் கூனிங், கிம்மாஸ், கெமிஞ்சே, ரெப்பா |
பரப்பளவு | 861 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் இசாம் முகமட் இசா (Mohd Isam Mohd Isa) |
மக்கள் தொகை | 88,123[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tampin; ஆங்கிலம்: Tampin Federal Constituency; சீனம்: 淡边国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P133) ஆகும்.[5]
தம்பின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து போர்டிக்சன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தம்பின் மாவட்டம் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம். நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். [7]
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது.
அதன் விளைவாக, சூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது.
தம்பின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் தம்பின் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P094 | 1974–1978 | மொக்தார் அசிம் (Mokhtar Hashim) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1983 | |||
1983–1986 | ஒமார் அப்துல்லா (Omar Abdullah) | |||
7-ஆவது மக்களவை | P105 | 1986–1990 | Mohd. Noh Rajab (Mohd. Noh Rajab) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P115 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | சசிமான் அபு மன்சூர் (Shaziman Abu Mansor) | ||
11-ஆவது மக்களவை | P133 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அசன் பகரோம் (Hasan Bahrom) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் இசாம் முகமட் இசா (Mohd Isam Mohd Isa) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் இசாம் முகமட் இசா (Mohd Isam Mohd Isa) | பாரிசான் நேசனல் | 23,283 | 38.15 | 6.07 ▼ | |
முகமது பைஸ் பட்சில் (Muhammad Faiz Fadzil) | பாக்காத்தான் அரப்பான் | 22,007 | 36.06 | 10.23 ▼ | |
அப்துல் அலிம் அபு பக்கர் (Abdul Halim Abu Bakar) | பெரிக்காத்தான் நேசனல் | 14,962 | 24.51 | 24.51 | |
சமானி இப்ராகிம் (Zamani Ibrahim) | தாயக இயக்கம் | 781 | 1.28 | 1.28 | |
மொத்தம் | 61,033 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 61,033 | 98.50 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 927 | 1.50 | |||
மொத்த வாக்குகள் | 61,960 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 81,099 | 75.26 | 6.23 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)