தம்புனான் மாவட்டம் | |
---|---|
Tambunan District | |
சபா | |
ஆள்கூறுகள்: 5°40′26.47″N 116°21′53.58″E / 5.6740194°N 116.3648833°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி |
தலைநகரம் | தம்புனான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,347 km2 (520 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 35,667 |
இணையதளம் | ww2 |
தம்புனான் மாவட்டம்; (மலாய்: Daerah Tambunan; ஆங்கிலம்: Tambunan District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். தம்புனான் மாவட்டத்தின் தலைநகரம் தம்புனான் (Tambunan Town).
தம்புனான் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். தம்புனான் மக்களில் பெரும்பாலோர் நெல், காய்கறிகள், மீன் பண்ணை, ரப்பர் தோட்டம், பனை எண்ணெய் தோட்டம், பொது ஊழியம் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள். 2021-ஆண்டு வரையில், தம்புனானில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பெரிய தொழில் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த மாவட்டம் சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து கிழக்கே 80 கி.மீ. தொலைவில்; கோத்தா கினாபாலு - தம்புனான் - கெனிங்காவ் நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டு உள்ளது. இரானாவ் நகருக்கு தெற்கே 48 கி.மீ. மற்றும் கெனிங்காவ் நகரில் இருந்து வடக்கே 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
தம்புனான் (Tambunan) எனும் பெயர் தம் அடோன் (Tam adon) மற்றும் கோம் புனான் (Gom bunan) எனும் சொற்களில் இருந்து பெறப்பட்டது. இரண்டு சொற்களும் இணைந்து தம்புனான் எனும் சொல் ஆனது.[2]
சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தம்புனான் மாவட்டத்தின் மக்கள் தொகை 35,667 பேர். கடசான்-டூசுன் (Kadazan-Dusun); இனக் குழுவினர் 86% பெரும்பான்மையாகக் கொண்ட நகரம். இந்தக் குழுவினருக்கு அடுத்து மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் பிற பழங்குடியினர் உள்ளனர்.[2]
தம்புனான் நகரம் ஒரு திறந்தவெளி பள்ளத்தாக்கு நகரம்; சராசரியாக 750 மீட்டர் உயரத்தில், குரோக்கர் மலைத்தொடரின் ஒரு பகுதியாக அமைந்து உள்ளது. ஆண்டு முழுவதும் மிதமான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டது.
குரோக்கர் மலைத்தொடரின் (Crocker Range) பள்ளத்தாக்குச் சரிவுகளில் அடுக்கடுக்காய் நெல் வயல்கள் உள்ளன. அத்துடன் ஏறக்குறைய 70 நெல்வயல் கிராமங்கள் உள்ளன.
தம்புனான் நகரைச் சுற்றிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. இவை பிரித்தானியக் காலனித்துவக் காலத்தின் மரபுகளைப் பறைசாற்றுகின்றன. ஒரு மூங்கிலை வெட்டினால் 20 மூங்கில் குருத்துகளை நட வேண்டும் என்று பிரித்தானியர்கள் சட்டம் போட்டு இருந்தார்கள்.
அதன்படி அங்குள்ள கடசான்-டூசுன் மக்கள், ஒரு மூங்கிலை வெட்டியதும் இருபது மூங்கில் கன்றுகளை நட்டு வைத்தார்கள். அதனால் தம்புனான் மலைப் பகுதிகளில் அதிகமான மூங்கில் காடுகளைக் காணலாம். தம்புனான் நகரம் ஒரு திறந்தவெளி பள்ளத்தாக்கு நகரம்; சராசரியாக 750 மீட்டர் உயரத்தில், குரோக்கர் மலைத்தொடரின் ஒரு பகுதியாக அமைந்து உள்ளது. ஆண்டு முழுவதும் மிதமான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டது.
குரோக்கர் மலைத்தொடரின் பள்ளத்தாக்குச் சரிவுகளில் அடுக்கடுக்காய் நெல் வயல்கள். ஏறக்குறைய 70 கிராமங்கள் நிறைந்து உள்ளன.
தம்புனான் நகரைச் சுற்றிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. இவை பிரித்தானியக் காலனித்துவக் காலத்தின் மரபுகளைப் பறைசாற்றுகின்றன. ஒரு மூங்கிலை வெட்டினால் 20 மூங்கில் குருத்துகளை நட வேண்டும் என்று பிரித்தானியர்கள் சட்டம் போட்டு இருந்தார்கள்.
அதன்படி அங்குள்ள கடசான்-டூசுன் மக்கள், ஒரு மூங்கிலை வெட்டியதும் இருபது மூங்கில் கன்றுகளை நட்டு வைத்தார்கள். அதனால் தம்புனான் மலைப் பகுதிகளில் அதிகமான மூங்கில் காடுகளைக் காணலாம்.
கம்போங் தீபபார் (Kampung Tibabar) எனும் கிராமத்தில் நெல் வயல்களுக்கு நடுவில் மாட் சாலே நினைவகம் (Mat Salleh Memorial) அமைந்துள்ளது. மாட் சாலே என்பவரின் நினைவாக மாநில அரசாங்கத்தால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
மாட் சாலே என்று நன்கு அறியப்பட்ட அவர், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (British North Borneo Company) எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மாட் சாலே கிளர்ச்சி (Mat Salleh Rebellion) என இந்தக் கிளர்ச்சி அழைக்கப் படுகிறது.
பிப்ரவரி 1, 1900-இல் பிரித்தானிய காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய பிறகு, மாட் சாலே கொல்லப்பட்ட அதே இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.[3]
தம்புனான் உள்நாட்டுச் சாராய வகைகளுக்கு பெயர் பெற்றது. லிகிங் (Lihing) மற்றும் தப்பாய் (Tapai) எனும் சாராயத் தயாரிப்புகளுக்கு நன்கு அறியப்பட்டது. அவை சபாவின் கடசான் மற்றும் டூசுன் மக்களால் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் அரிசிவகை சாராயங்கள் ஆகும்.
தம்புனான் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் ராபிலேசியா வனக் காப்பகம் (Rafflesia Forest Reserve) உள்ளது. உலகின் மிகப்பெரிய மலரான ராபிலேசியா மலர்களுக்காக இந்த வனக் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.[4] [5]
தம்புனான் நகரத்திற்கு கிழக்கே சபாவின் இரண்டாவது உயரமான மலையான துருஸ்மாடி மலை (Trus Madi) உள்ளது. இதன் உயரம் 2642 மீட்டர்.
தட்பவெப்ப நிலைத் தகவல், தம்புனான் மாவட்டம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
30.6 (87) |
31.7 (89) |
32.2 (90) |
32.2 (90) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.7 (89) |
31.1 (88) |
30.6 (87) |
30 (86) |
31.1 (88) |
தாழ் சராசரி °C (°F) | 19.4 (67) |
18.3 (65) |
18.9 (66) |
19.4 (67) |
20 (68) |
19.4 (67) |
18.9 (66) |
18.9 (66) |
19.4 (67) |
19.4 (67) |
19.4 (67) |
20 (68) |
19.4 (67) |
பொழிவு mm (inches) | 147 (5.8) |
94 (3.7) |
147 (5.8) |
191 (7.5) |
208 (8.2) |
185 (7.3) |
130 (5.1) |
124 (4.9) |
163 (6.4) |
178 (7) |
173 (6.8) |
152 (6) |
1,890 (74.4) |
ஆதாரம்: Weatherbase[6] |