தம்புன் (P063) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Tambun (P063) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கிந்தா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 160,558 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தம்புன் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | தம்புன், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், ஈப்போ, குனோங் ரப்பாட் |
பரப்பளவு | 535 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அன்வர் இப்ராகீம் (Anwar Ibrahim) |
மக்கள் தொகை | 259,166 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தம்புன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tambun; ஆங்கிலம்: Tambun Federal Constituency; சீனம்: 和丰国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P063) ஆகும்.[7]
தம்புன் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து தம்புன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தம்புன் நகரம் பேராக் மாநிலத்தில் கிந்தா மாவட்டத்தில் உள்ள நகரம். ஈப்போவில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கோலாலம்பூர் தலைநகரிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ளது. 1990-ஆம் ஆண்டு தம்புன் புது நகரம் உருவாக்கப் பட்டது.
தம்புன் எனும் மலாய்ச் சொல் பம்ப்ளிமாஸ் பழத்தைக் குறிக்கும். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகப் பம்ப்ளிமாஸ் பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
தம்புன் பகுதியைச் சுற்றிலும் நிறைய சுண்ணக்கல் மலைகள் உள்ளன. இங்குள்ள மண் கறுப்பாகவும் இரும்பு வளம் கொண்டதாகவும் இருக்கின்றது. கிராமப் புறங்களில் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளையும் காண முடியும். இவை அழகும் இயற்கையான வனப்பும் வாய்ந்தவை. இங்கு பென்சில் வடிவத்தில் ஓர் அழகிய சுண்ணாம்புக் குன்று உள்ளது. அதைக் காண பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர்.
இங்குள்ள தம்புன் குகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதி குகைவாசிகள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. இதே போல ஓவியங்கள் லெங்கோங்கிலும் கண்டுபிடிக்கப் பட்டன. பொது மக்கள் பார்வைக்கு தம்புன் குகை ஓவியங்கள் குகை இன்னும் திறந்து விடப் படவில்லை. இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் அரசு அனுமதியுடன் ஆய்வு செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.
தம்புன் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1986-ஆம் ஆண்டில் கிந்தா மக்களவைத் தொகுதியில் இருந்து தம்புன் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P057 | 1986–1990 | யகயா முகமட் சாபி (Yahaya Mohd. Shafie) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | நவாவி மாட் அவின் (Nawawi Mat Awin) | ||
9-ஆவது மக்களவை | P060 | 1995–1999 | அகமட் இசுனி அனட்சியா (Ahmad Husni Hanadzlah) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P063 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | அகமட் பைசல் அசுமு (Ahmad Faizal Azumu) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அன்வார் இப்ராகிம் (Anwar Ibrahim) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
160,558 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
126,444 | 77.71% | ▼ - 4.80% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
124,769 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
306 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,369 | ||
பெரும்பான்மை (Majority) |
3,736 | 2.99% | ▼ - 3.13 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
அன்வார் இப்ராகிம் (Anwar Ibrahim) |
பாக்காத்தான் | 124,769 | 49,625 | 39.77% | - 4.69% ▼ | |
அகமட் பைசல் அசுமு (Ahmad Faizal Azumu) |
பெரிக்காத்தான் | - | 45,889 | 36.78% | + 36.78% | |
அமினுடின் அனபியா (Aminuddin Md Hanafiah) |
பாரிசான் | - | 28,140 | 22.55% | - 15.80 % ▼ | |
அப்துல் ரகீம் தாகீர் (Abdul Rahim Tahir) |
தாயக இயக்கம் | - | 1,115 | 0.89% | + 0.89% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)