தயான் சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | 20 திசம்பர் 1988 தலச்சேரி, கண்ணூர், கேரளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | அர்பிதா செபாஸ்டியன் (தி. 2017) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | வினீத் சீனிவாசன் (சகோதரர்) எம். மோகனன் (மாமா) |
தயான் சீனிவாசன் (Dhyan Sreenivasan) (பிறப்பு 20 திசம்பர் 1988) ஒரு இந்திய நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமாவார். குறிப்பாக இவர் மலையாளப் படங்களில் பணியாற்றுகிறார் .
இவர், தனது மாமா எம்.மோகனனின் கீழ் உதவி இயக்குநராகத் தொடங்கினார். தனது மூத்த சகோதரர் வினீத் சீனிவாசன் இயக்கிய திர (2013) படத்தின் மூலம் அறிமுகமானார்.[1] குஞ்சிராமாயணம் (2015), ஆதி கபியாரே கூட்டமணி (2015), ஒரே முகம் (2016), குட் ஆலோசனா (2017) ஆகிய படங்கள் இவரது குறிப்பிடத்தக்க ஒரு சில படங்களாகும். நிவின் பாலி, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் அஜூ வர்கீஸ், விசாக் சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து தாயரித்த லவ் ஆக்சன் டிராமா (2019) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் .
இவர், பிரபல மலையாள நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான சீனிவாசனின் இளைய மகனாவார்.[2] இவரது சகோதரர் வினீத் சீனிவாசனும் மலையாளத் திரையுலகில் ஒரு பாடகராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். தயான் தனது நீண்டகால காதலியான அர்பிதா செபாஸ்டியனை 2017 ஏப்ரல் 7 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3][4][5]
தனது பொறியியல் படிப்பை முடித்த பிறகு, படங்களில் பணியாற்ற விரும்பியதால் ஒரு காட்சி தொடர்பு பாடநெறியில் சேர்ந்தார். இவரது சில நேர்காணல்களின்படி, தான் இயக்கி, நடித்திருந்த ஒரு குறும்படத்தை தனது சகோதரர் வினீத் சீனிவாசன் பார்த்ததாகவும், இவருக்கு திர படத்தில் றினார். இப்படத்தில் இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகையான சோபனாவுடன் இணைந்து நடித்திருந்தார்.[1] இப்படத்தில் இவரது நடிப்பு பொதுவாக விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[6][7]