தருகா | |
---|---|
![]() | |
தருகா லாங்கினசசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மீகாசுகும்பூரா மற்றும் பலர் 2010[1]
|
3 சிற்றினங்கள் |
தருகா (Taruga) என்பது இலங்கையில் காணப்படும் தவளைப் பேரினம் ஆகும். இவை பழைய உலக மரத்தவளைக் குடும்பமான இராக்கோபோரிடே குடும்பத்தினைச் சார்ந்தவை.[2]
தருகா பேரினச் சிற்றினங்கள் முன்பு பாலிபீடேட்சு பேரினத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. தற்போதைய வகைப்பாட்டியலின்படி தருகா பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன. இவை, த. பாசுடிகோ, த. ஈக்வேசு மற்றும் த. லாங்கினாசசு. நுரைக் கூடுகட்டும் இராக்கோபோர்டு மரத் தவளைகளின் இரண்டு பேரினங்களும் இலங்கையில் காணப்படுகின்றன. பாலிபீடேட்டு பேரினத்தின் சிற்றினங்கள் இந்தியாவிலும் ஆசியாவிலும் பரவியுள்ளன. பா. மாக்குலடசு-தெற்காசியாவில் பரவலாக பரவிக்காணப்படுகிறது. பா. குரிசிஜெர் இலங்கையில் காணப்படும் அகணிய உயிரி. தருகா பேரினத்தின்கீழ் த. ஈக்வேசு, த. பாசுடிகோ[3] மற்றும் த. லாங்கினாசசு என மூன்று சிற்றினங்கள் பெரும்பாலும் காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பரவலைக் கொண்டுள்ளன. முதிர்ச்சியடைந்த தருகாவினைப் பாலிபீடேட்டு தவளைகளிலிருந்து வேறுபடுத்தும் சிறந்த பண்பாக குதத்தினைச் சுற்றிக் காணப்படும் கூம்பு போன்ற பகுதியாகும். மேலும், தருகாவின் செவிப்பறை மேற்மடிப்பு பாலிபீடேட்டுகளில் உள்ளதை விட நேரானது. பாலிபீடேட்டுகளின் மூக்கை விட தருகா மூக்கு மிகவும் கூர்மையானது.
தலைப்பிரட்டையினைக் கருத்தில் கொண்டு, பாலிபீடேட்டுகளின் குதம் இடது காலுக்கும் வாலுக்கும் இடையே ஒரு குழல் போன்று காணப்படும். ஆனால் தருகாவில், இத்தகைய குழல் இல்லை. கால் மற்றும் வாலிற்கு இடையில் ஒரு திறப்பு மட்டுமே உள்ளது. நாக்கில் உள்ள வெளி நீட்சிகளின் எண்ணிக்கை, நாக்கின் வடிவம் போன்ற வாய்க் குழியும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இவை தருகாவினைப் பாலிபீடேட்டுகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன.
சமசுகிருதத்தில் தருகா (மற்றும் ஆரம்பக்கால-சிங்களம்) "மரம் ஏறுபவர்" என்று பொருள். இந்தப் பெயர் மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இவை மரங்களில் வசிக்கின்றன. இவை அரிதாகவே தரைக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் தண்ணீருக்கு மேற்பகுதியில் காணப்படும் தாவரங்களில் கூட முட்டையிடுகின்றன.
மூன்று தவளைச் சிற்றினங்களும் மரங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் ஆழமற்ற மற்றும் மெதுவாக பாயும் நீரோடைகள் அல்லது குட்டைகளில் இனப்பெருக்கமும் செய்கின்றன.
இந்தச் சிற்றினத்தின் பெண் ஒரு நுரை கூட்டினை நீர் நிலைக்கு மேல் உள்ள மரக்கிளையில் நீரின் மீது தொங்கும்படி கட்டும். இதில் முட்டைகளை இடும். இதன் பிறகு முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் தலைப்பிரட்டைகள் தண்ணீரில் விழுகின்றன. இங்கு இவை உருமாற்றம் ஏற்பட்டு வளர்ச்சியடைகின்றன. தண்ணீரிலிருந்து வெளிப்படும் இளம் தவளைகள் மரங்களில் தமது வாழ்க்கையைத் தொடருகின்றன.
இந்தியாவுடன் பல நிலப்பகுதி தொடர்புகள் இருந்தபோதிலும், தருகா இலங்கை நன்கு பரவியுள்ள அகணிய உயிரியாக உள்ளது.
இந்தப் பேரினத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[4]