தர்ம கிடாங்கு மசூதி என்பது இந்தியாவின் சென்னையின் ஜார்ஜ்டவுன் பகுதியின் அங்கப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். முத்தியால்பேட்டையில் உள்ள பழமையான மசூதியாக இது கருதப்படுகிறது. முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் முகமது அலி வாலாஜாவால் கருங்கற்களால் மீண்டும் கட்டப்பட்டது. இதே காலத்தில், திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி என்னும் பெரிய மசூதியும் கருங்கற்களால் கட்டப்பட்டது.
இம்மசூதி 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய மசூதி கட்டப்பட்டது. இதற்கு "மஸ்ஜித்-இ-மாமூர்" என்ற பெயரும் உள்ளது.
கோயில் |
|
---|---|
தேவாலயம் | |
பள்ளிவாசல் |