தர்மகர்த்தா முறை என்பது காந்தியடிகளின் ஒரு சமூக-பொருளாதார தத்துவமாகும். [1] . இதன்படி செல்வந்தர்கள் தங்கள் மிகுதியான வருமானத்தை பொதுமக்களின் நலன்களுக்காக தர்மகர்த்தாக்களாக இருந்து செலவிட வேண்டும் என்பதாகும். காந்தியின் இந்தக் கோட்பாடானது நிலப்பிரபுக்கள், அரச குடியினர், முதலாளிகள் போன்றோருக்கு ஆதரவாக இருப்பதாக சோசலிசவாதிகளால் கண்டனம் செய்யப்பட்டு, எதிர்க்கப்பட்டது. [2] இந்தக் கோட்பாட்டின்படி, ஏழைகளுக்கு உதவுவதற்காக தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த செல்வந்தர்கள் முன்வருவார்கள் என்று காந்தி நம்பினார். இது குறித்து காந்தியடிகளின் சொற்கள் "அறிவுள்ள ஒருவர் அதிகமாகச் சம்பாதிக்க நான் அனுமதிப்பேன்; அவருடைய ஆற்றலை நசுக்கிவிட மாட்டேன். ஆனால், ஒரு தந்தையின் சாம்பாதிக்கும் திறமையுள்ள பிள்ளைகளின் வருவாயெல்லாம் பொதுவான குடும்ப நிதிக்குப் போவதைப் போன்று ஒரு அறிவாளியின் வருமானத்தில் அதிகமிருப்பதெல்லாம் ராஜ்ஜியத்தின் நன்மைக்கு பயன்பட வேண்டும் தர்மகர்த்தாக்கள் என்ற வகையில்தான் அவர்கள் சம்பாதிக்க வேண்டும். "[3] காந்தி தனது ஆதரவாளர்களுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரு எளிய நடைமுறையாக இந்த சூத்திரத்தை உருவாக்கினார். இந்த தர்மகர்த்தா சூத்திரத்தை நடைமுறைப் படுத்தும் வழி குறித்த வரைவு அறிக்கையானது காந்தியின் சக ஊழியர்களான நாரரி பாரிக் மற்றும் கிஷோர்லால் மஷ்ருவாலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, எம். எல். டந்த்வாலாவால் மேம்படுத்தப்பட்டது.
காந்தியின் இந்த தர்மகர்த்தா முறையானது டாடா குழுமத்தின் நிறுவனரான, ஜெ. ர. தா. டாட்டாவைக், கவர்ந்தது. இந்த யோசனையின் அடிப்படையில் அவர் தனது தனி மற்றும் தொழில் வாழ்க்கையையில் வளர்த்தெடுத்தார். [4]