தர்மபாலன் | |
---|---|
அதன் அண்டை நாடுகளுடன் பாலப் பேரரசு | |
பால வம்ச மன்னன் | |
ஆட்சிக்காலம் | 8 ஆம் நூற்றாண்டு |
முன்னையவர் | முதலாம் கோபாலன் |
பின்னையவர் | தேவபாலன் |
துணைவர் | இரணதேவி (இராட்டிரகூட இளவரசி) |
குழந்தைகளின் பெயர்கள் | திரிபுவனபாலன்[1] தேவபாலன் |
அரசமரபு | பால வம்சம் |
தந்தை | முதலாம் கோபாலன் |
தாய் | தெத்தாதேவி[2] |
மதம் | இந்து சமயம் |
தர்மபாலன் ( Dharmapala ) [3] (கி.பி. 770-810களுக்கு இடையில் ஆட்சி செய்தார்) இந்திய துணைக் கண்டத்தில் வங்காளப் பகுதியின் பாலப் பேரரசின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார். இவர் பால வம்சத்தை நிறுவிய முதலாம் கோபாலனின் மகனும் வாரிசும் ஆவார். இவர் பேரரசின் எல்லைகளை பெரிதும் விரிவுபடுத்தினார். மேலும் பாலர்களை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் ஆதிக்க சக்தியாக ஆக்கினார்.
தர்மபாலன் நேரடியாக இன்றைய வங்காளம் மற்றும் பீகாரில் ஆட்சி செய்தார். மேலும் கன்னோசியிலும் தனது ஆட்சியாளரைக் கொண்டு ஆட்சியை நிறுவினார். வட இந்தியாவின் பல ஆட்சியாளர்கள் இவரது மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டதாக பாலப்பதிவுகள் கூறுகின்றன. ஆனால் இந்த கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தர்மபாலன் குர்ஜரா-பிரதிஹாரர்களால் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் ராஷ்டிரகூடர்கள் பிரதிகாரர்களை தோற்கடித்தனர். வட இந்தியாவில் மட்டுமே பாலர்கள் ஆதிக்க சக்தியாக இருந்தனர். தர்மபாலனுக்குப் பிறகு இவரது மகன் தேவபாலன் பேரரசை மேலும் விரிவுபடுத்தினார்.[4]
பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று பதிவுகளின் வெவ்வேறு விளக்கங்களின் அடிப்படையில், பல்வேறு வரலாற்றாசிரியர்கள் தர்மபாலாவின் ஆட்சியை கி.பி. 770 க்கும் 812க்கும் இடையே மதிப்பிடுகின்றனர்.[5]:32–37