தருமராசிக தூபி دھرم راجک اسٹوپا | |
---|---|
தருமராசிக தூபி, தட்சசீலம், பாக்கித்தான் | |
இருப்பிடம் | தட்சசீலம், பஞ்சாப், பாக்கித்தான் |
ஆயத்தொலைகள் | 33°44′N 72°47′E / 33.73°N 72.78°E |
வகை | விகாரை |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி 2ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | 5ஆம் நூற்றாண்டு |
கலாச்சாரம் | குசானர், கிடாரைட்டுகள் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | சர் சான் மார்சல் |
அதிகாரபூர்வ பெயர்: தட்சசீலம் | |
அளவுகோல் | iii, iv |
வரையறுப்பு | 1980 |
சுட்டெண் | 139 |
தருமராசிக தூபி (Dharmarajika Stupa) இதனை தட்சசீலம் பெரிய தூபி என்றும் அழைப்பர். மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு முதலில் தருமராசிக தூபி நிறுவப்பட்டது.[1] கிபி 2-ஆம் நூற்றாண்டில் குசான் பேரரசு காலத்தில் தருமராசிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய விகாரைகளுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் எத்தலைட்டுகளின் மன்னர் மிகிரகுலன் ஆட்சிக் காலத்தில் தருமராசிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது.
இப்பௌத்த தூபி பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ளது.[2] 1980ல் இயுனெசுகோ நிறுவனம், தருமராசிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.[3] இப்பகுதி இசுலாமியமயமான போது, தருமராசிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது.
சான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தருமராசிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.
தர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள்[4] மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை பௌத்தர்களின் வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)