தற்காலிக நீக்கம் அல்லது இடை நீக்கம் (Suspension) என்பது பணியிட விசாரணை நடைபெறுவதற்காக அல்லது நிறுவனத்தின் கொள்கை மீறலுக்கான ஒழுங்கு நடவடிக்கையாக, பணியாளருக்கு ஊதியத்துடன் அல்லது ஊதியமல்லாது வழங்கப்படும் தற்காலிக நீக்கக் காலத்தினைக் குறிப்பதாகும். பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும் காலத்தினையும் இது குறிக்கிறது.
ஒரு நிறுவனத்தின் கொள்கையை மீறியதற்காக பணியிடத்தில் இடைநீக்கம் செய்யப்படுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். ஒரு வணிக மேலாளர் அல்லது மேற்பார்வையாளர் ஒரு பணியாளரின் செயலை, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ வரம்பு மீறியதாகக் கருதும்போது பணி தற்காலிக நீக்கங்கள் ஏற்படும் . இந்த நீக்கமானது நிறுவன நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாது.
கல்வித்துறையில், இடைநீக்கம் (தற்காலிக விலக்கு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பள்ளித் தண்டனையின் ஒரு வடிவமாகும், இதில் ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பள்ளிப் பாடங்களைக் கற்பதில் இருந்து விலக்கப்படுகிறான். தற்காலிக நீக்கம் என்பது வெளியேற்றும் நடவடிக்கைகளின் ஒரு வடிவமாகும்; மற்றொரு வடிவம் பள்ளியிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுவதாகும். [1] [2] ஒரு மாணவரின் பெற்றோருக்கும், சில சமயங்களில் மாணவர் சிறப்புக் கவனம் செலுத்தக் கூடிய மாணவராக இருந்தால் சமூகப் பணியாளர்களுக்கும், பள்ளி இடைநீக்கத்திற்கான காரணம் குறித்துத் தெரிவிக்கப்படும்.