தலாத் Dalat Town Bandar Dalat | |
---|---|
ஆள்கூறுகள்: 2°9′56″N 111°38′3″E / 2.16556°N 111.63417°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா பிரிவு |
மாவட்டங்கள் | தலாத் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 905 km2 (349 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96300 |
இணையதளம் | mukah |
தலாத் (மலாய்; Bandar Dalat; ஆங்கிலம்: Dalat Town, சீனம்: 大叻镇), மலேசியா, சரவாக், முக்கா பிரிவு, தலாத் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் ஓயா ஆற்றங்கரையில் (Oya River) அமைந்துள்ளது.
இந்த நகரம் தலாத் மாவட்டத்தின் நிர்வாக மையமாகச் செயல்படுகிறது.
தலாத் மாவட்டத்தின் சுருக்கமான வரலாறு:
தலாத் நகரத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் சவ்வரிசி மாவு ஆகும். தலாத் மாவட்டத்தில் 28,765 எக்டர் வேளாண் நிலம் சவ்வரிசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சவ்வரிசி மாவு தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு 75 டன் சவ்வரிசி மாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.[1]
தலாத் நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் மெலனாவு மொழியைப் பயன்படுத்துகின்றனர். மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, இபான் மொழி, மாண்டரின் மொழி, ஹொக்கியன் மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.
தலாத் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தலாத் நகரம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.3 (86.5) |
30.6 (87.1) |
31.5 (88.7) |
32.2 (90) |
32.7 (90.9) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
31.9 (89.4) |
31.9 (89.4) |
31.8 (89.2) |
31.5 (88.7) |
31.0 (87.8) |
31.68 (89.02) |
தினசரி சராசரி °C (°F) | 26.3 (79.3) |
26.5 (79.7) |
27.1 (80.8) |
27.4 (81.3) |
27.9 (82.2) |
27.5 (81.5) |
27.2 (81) |
27.0 (80.6) |
27.2 (81) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
27.08 (80.74) |
தாழ் சராசரி °C (°F) | 22.3 (72.1) |
22.4 (72.3) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
23.1 (73.6) |
22.7 (72.9) |
22.2 (72) |
22.2 (72) |
22.5 (72.5) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.52 (72.53) |
மழைப்பொழிவுmm (inches) | 355 (13.98) |
272 (10.71) |
276 (10.87) |
244 (9.61) |
216 (8.5) |
179 (7.05) |
180 (7.09) |
215 (8.46) |
263 (10.35) |
272 (10.71) |
282 (11.1) |
354 (13.94) |
3,108 (122.36) |
ஆதாரம்: Climate-Data.org[2] |