தலைமுறைகள் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | சசிகுமார் |
கதை | பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | சசிகுமார் சுப்பிரமணி இரம்யா சங்கர் வினோதினி பாலு மகேந்திரா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | கம்பனி புரடக்சன் |
விநியோகம் | சினிமா பட்டறை |
வெளியீடு | 20 திசம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமுறைகள் (Thalaimuraigal) பாலு மகேந்திராவின் இயக்கத்தில் 2013 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1] இத்திரைப்படத்தினை எம். சசிகுமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் இளையராஜவின் இசையில்[2], பாலு மகேந்திராவின் எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் 2013 இல் இத்திரைப்படம் வெளியானது.
தலைமுறை என்னும் இடைவெளிகளைத் தாண்டிய நிலையில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவையும் அன்பையும் சொல்கின்றது இத்திரைப்படம். திடுக் திருப்பங்கள் இல்லாமல் பாடல்கள் இல்லாமல், வழவழப்பான நகைச்சுவை இல்லாமல், சண்டைகள் இல்லாமல் எளிய மானுடர்களின் வாழ்வை, உறவுகளின் உன்னதத்தை ரசிகர்களுக்கு உயிர்ப்புடன் கடத்தியுள்ளார் இயக்குநர் பாலு மகேந்திரா.[3]
படத்தில் பாலுமகேந்திரா அவர்களே முதன்மைக் கதைப்பாத்திரமாக நடித்திருக்கிறார், தமிழ்திரையில் இப்படியொரு கதைப்பாத்திரத்தை இதன் முன்பு நான் கண்டதேயில்லை, பாலுமகேந்திரா பிரமாதப்படுத்தியிருக்கிறார், கண்கலங்க வைக்கும் நடிப்பு என்கிறார் எஸ். இராமகிருஷ்ணன் .[4]