தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி | |
---|---|
![]() கட்டிடத்தின் தெற்கு வளாகத்தில் நடுவண் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | தில்லி பாணி |
இடம் | புது தில்லி, இந்தியா |
கட்டுமான ஆரம்பம் | 1912 |
நிறைவுற்றது | 1927 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 148,000 sq ft (13,700 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | எர்பெர்ட்டு பேக்கர் |
தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building) அல்லது நடுவண் தலைமைச் செயலக வளாகம் (Central Secretariat) இந்திய அரசின் நிர்வாகத்தை நடத்தும் நடுவண் தலைமைச் செயலகம் இயங்கும் கட்டிடமாகும். 1910களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் இந்தியக் குடியரசு அமைச்சரவைகளில் சில முக்கியமான அமைச்சரகங்கள் இயங்குகின்றன. புது தில்லியின் இரைசினாக் குன்றில் இக்கட்டிடம் ராஜ்பத்திற்கு இருபுறமும் சமச்சீராக அமைந்துள்ள இரு வளாகங்களாக (வடக்கு வளாகம், தெற்கு வளாகம்), குடியரசுத் தலைவர் மாளிகையை ஒட்டி அமைந்துள்ளது.
1911இல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்ட பிறகு புது தில்லியை நகமாக திட்டமிடல் மற்றும் ஆளுநர் மாளிகை (தற்போதைய குடியரசுத் தலைவர் இல்லம்) ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான பொறுப்பு எட்வின் லூட்டியன்சு வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பிரித்தானியக் கட்டடக் கலைஞர் எர்பெர்ட்டு பேக்கர் அவருடன் சேர்ந்தார். இரைசினாக் குன்று அருகே அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பை பேக்கர் எடுத்துக் கொண்டார். ஆளுநர் இல்லத்தை விட செயலகம் குறைந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்று லுலூட்யன்சு விரும்பினார். ஆனால் பேக்கர் அதை அதே உயரத்தில் எழுப்ப விரும்பியிருந்தார். இறுதியில் பேக்கரின் நோக்கங்கள் நிறைவேறின.[1][2]
இந்தியாவின் தலைநகரம் தில்லிக்கு மாற்றப்பட்ட பிறகு, 1912 ஆம் ஆண்டில் வடக்கு தில்லியில் ஒரு தற்காலிக செயலகக் கட்டிடம் கட்டப்பட்டது. 1931இல் புதிய தலைநகரம் திறக்கப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர், பழைய தில்லியில் உள்ள 'பழைய செயலகத்திலிருந்து' புதிய தலைநகரத்தின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இங்கு இடம்பெயர்ந்தன.
வங்காள மாகாணம் மற்றும் சென்னை மாகாணம் உட்பட பிரிட்டிஷ் இந்தியா தொலைதூரப் பகுதிகளிலிருந்து பல ஊழியர்கள் புதிய தலைநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கோல் மார்க்கெட் பகுதியைச் சுற்றி அவர்களுக்கான வீடுகள் உருவாக்கப்பட்டன.[3]
பழைய செயலகக் கட்டிடம் இப்போது தில்லி சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது.[4] அருகிலுள்ள நாடாளுமன்ற மாளிகை பின்னர் கட்டப்பட்டது. . நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம் 1921 இல் தொடங்கப்பட்டது. மேலும் இந்தக் கட்டிடம் 1927 இல் திறக்கப்பட்டது.[5]
இன்று, இப்பகுதியில் தில்லி மெட்ரோவின் மத்திய செயலக நிலையம் சேவை செய்கிறது.[6]