தல்வாரா ஏரி

தல்வாரா ஏரி
கிராமம்
தல்வாரா ஏரி is located in இராசத்தான்
தல்வாரா ஏரி
தல்வாரா ஏரி
தல்வாரா ஏரி is located in இந்தியா
தல்வாரா ஏரி
தல்வாரா ஏரி
தல்வாரா ஏரி is located in ஆசியா
தல்வாரா ஏரி
தல்வாரா ஏரி
ஆள்கூறுகள்: 29°31′06″N 74°35′27″E / 29.51833°N 74.59083°E / 29.51833; 74.59083
Country இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அனுமான்காட் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

தல்வாரா ஏரி (Talwara Lake) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் அனுமான்காட் மாவட்டத்திலுள்ள காகர் ஆற்றின் போக்கில் உள்ள ஒரு தாழ்வான பகுதியில் உருவாகியுள்ள சிறிய பருவகால ஏரி ஆகும்.[1] அனுமன்காட் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் உள்ள ஒரே ஏரி தல்வாரா ஏரி என்று கூறப்படுகிறது.[2] ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் காகர் நதி வெள்ளப்பெருக்கின் போது நிரம்பும் இந்த ஏரியில் சில மாதங்களுக்கு மட்டுமே நீர் தேங்கி இருக்கும்.

அமைவிடம்

[தொகு]

தல்வாரா ஏரி, எல்லனாபாத் மற்றும் அனுமான்காட் நகருக்கு இடையில் அமைந்துள்ளது. ஒட்டு தடுப்பணை மற்றும் நீர்த்தேக்கத்திலிருந்து (அரியானாவின் சிர்சா மாவட்டத்தில்) கிட்டத்தட்ட 40 கி.மீ. கீழே இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி அமைந்துள்ள கிராமத்தி கிட்டத்தட்ட 15000 பேர் மக்கள் வசிக்கின்றனர். அனுமன்காட் மாவட்டத்தின் ஒரு துணைத் தொகுதியாக இப்பகுதி உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம்

[தொகு]

இந்த இடம் 1191 ஆம் ஆண்டின் முதல் தாரைன் போர் மற்றும் 1192 ஆம் ஆண்டு பிருத்திவிராச் சௌகான் மற்றும் கோரியின் முகம்மதுவிற்கும் இடையே நடந்த இரண்டாவது தாரைன் போர் நடந்த இடமாக வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது.[3]

கி. பி. 1398 -1399 இல் இந்தியாவின் படையெடுப்பில், தைமூர் நவீனகால அனுமான்காட்டின் பட்னார் கோட்டையை வென்ற பிறகு இந்த ஏரியின் கரையில் முகாமிட்டார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 History of Sirsa Town, Atlantic Publishers & Distri, 1991, ... Amir Timur, the king of Samarkand, launched a fierce attack ... overpowered the fort Bhatnair ... first halt was at a place called Kinar-e-Hauz (bank of a tank or lake) which is now known as Talwara Lake on the way between Bhatnair and Firozabad. The assumption of some persons that Timur had relaxed on the bank of Ottu lake is not logical ...
  2. Government of India (1972), Rajasthan [district Gazetteers]: Ganganagar, Printed at Government Central Press, 1972, ... No natural lakes and tanks exist in the district except one artificial lake known as Talwara Jhil. It has come into being by formation of a depression in the bed of river Ghaggar where water stands accumulated. It lies in Hanumangarh tehsil and is of a small size. No irrigation is possible from it as water is retained only for a few months ...
  3. "Hanumangarh District Census Handbook" (PDF). Government of India.