தல்வீர் பண்டாரி | |
---|---|
நீதியரசர் தல்வீர் பண்டாரி | |
நீதியரசர், அனைத்துலக நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 ஏப்ரல் 2012 | |
நீதியரசர் , இந்திய உச்சநீதி மன்றம் | |
பதவியில் 28 அக்டோபர் 2005 – 27 ஏப்ரல் 2012 | |
தலைமை நீதியரசர், பம்பாய் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 24 சூலை 2004 – 27 அக்டோபர் 2005 | |
நீதியரசர், தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 19 மார்ச்சு 1991 – 23 சூலை 2004 | |
தல்வீர் பண்டாரி (Dalveer Bhandari, பிறப்பு: அக்டோபர் 1, 1947) இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், அனைத்துலக நீதிமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.
தல்வீர் பண்டாரி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வழக்குரைஞர் தம்பதிகளின் புதல்வராவார்.[1][2] ஜோத்பூரில் இளங்கலை சட்டவியலில் பட்டம் பெற்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 1968 முத் 1970 வரை பயிற்சி பெற்றார். பின்னர் சிகாகோவில் முதுகலை பட்டம் பெற்றார். 1973ல் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு நீதி தொடர்பான கண்காணிப்பு ஆய்வுக்கு சென்றார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் இந்தியா தொடர்பான திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.
கர்நாடக மாநில தும்கூர் பல்கலைக்கழகம் இவருக்கு வழக்கியலில் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இந்தியா திரும்பிய தல்வீர் பண்டாரி 1973 முதல் 1976 வரை ராஜஸ்தான் நீதிமன்றத்திலும் பின்னர் உயர்வு பெற்று 1991 வரை டெல்லி உயர்நிதிமன்ற வழக்குரைஞராகவும் பணியாற்றினார்..[3]
டெல்லி நீதிமன்றத்தின் சட்ட சேவை மையத்தின் உறுப்பினராகவும் சர்வதேச வழக்குரைஞர்கள் அமைப்பிலும் பதவி வகித்துள்ளார். சூலை 2004 இல் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். பணியின் போது பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டுள்ளார். ஒரு வருடத்திற்கு பின்னர் 28 அக்டோபர் 2005 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக பதவியேற்றார்
2012 சூன் மாதம் 19 இல் அனைத்துலக நீதிமன்றத்தின் உறுப்பினரானார்.
நீதியரசர் தல்வீர் பண்டாரி இந்திய அரசின் சார்பாக 2012 சனவரியில் அவுன்கா சவுகத் அல்கசவ்னிஹ் (ஜோர்டான்) பதவி விலகியதை அடுத்து நீதியரசர் தேர்விற்கு போட்டியிட்டார்.[4] ஏப்ரல் 27, 2012 இல் நடைபெற்ற தேர்தலில் 122 வாக்குகள் பெற்று எதிர் வேட்பாளரான பிலிப்பைன்சின் ப்லோரன்டினோ ஃபெலிசியானோவைத் தோற்கடித்தார் [5]
2017ம் ஆண்டு நவம்பர் 20 இல் நடைபெற்ற தேர்தலிலும் எதிர் வேட்பாளரான ஐக்கிய ராச்சியத்தை சேர்ந்த கிரிஸ்டோபர் கிரீன்வுட் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றதை அடுத்து தேர்வு செய்யப்பட்டார்.[6]
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help)