தளவாய் சலபதி ராவ் (Dalavai Chalapathi Rao) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோல் கைப்பாவை கைவினை கலைஞராவார்.[1]
தோல் கைப்பாவை கலையில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2020 ஆம் ஆண்டு சலபதி ராவுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4][5][6]
தளவாய் சலபதி ராவ் 1936 ஆம் ஆண்டு ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள நிம்மலகுந்தாவில் ஒரு பாரம்பரிய தோல் பொம்மை தயாரிப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். தர்மாவரம் மண்டலத்தின் நிம்மலகுந்தா கிராமத்தில் தற்போது வசித்துவருகிறார்.[7] 1988 ஆம் ஆண்டு தனது கலைக்காக ஒரு தேசிய விருதையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டு கலா ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[8][9]