தள்ளூரி ராமேஸ்வரி | |
---|---|
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | தீபக் சேத் |
விருதுகள் | பிலிம் பேர் மற்றும் நந்தி விருது |
ராமேஸ்வரி என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி, ஒடியா மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தள்ளூரி ராமேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
இவர் ஆந்திராவில் பிறந்தவர். காக்கிநாடாவில் வளர்ந்தார். இவர் பஞ்சாபி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தீபக் சேத்தை மணந்தார். அவருக்கு பாஸ்கர பிரதாப் சேத் மற்றும் சூர்யா பிரேம் சேத் என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமேஸ்வரி தனது குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார்.
1978 இல் கே. விஸ்வநாத் இயக்கத்தில் சந்திர மோகன் உடன் ராமேஸ்வரி முதல்முறையாக சீதாமகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.[1] இத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியமைக்காக பிலிம் ஃபேர் விருது கிடைத்தது.[2]