தாசரி நாராயண ராவ் | |
---|---|
மே 24, 2004இல் ராவ் புதுதில்லியில் அமைச்சராக பதவி ஏற்கிறார். | |
பிறப்பு | பாலகொல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 4 மே 1947
இறப்பு | 30 மே 2017 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா | (அகவை 70)
பணி | பத்திரிகையாளர் திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் இயக்குனர் அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | தாசரி பத்மா |
பிள்ளைகள் | தாசரி பிரபு தாசரி அருண் எம். ஹேமாலயகுமாரி |
விருதுகள் | தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா |
தாசரி நாராயண ராவ் (Dasari Narayana Rao) ( மே 4, 1947 - மே 30, 2017) ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், வசன கர்த்தா, நடிகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்டவர். இவர், தெலுங்கு சினிமா, தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டில் தன் பணியால் புகழைப் பெற்றவர். இவர், பல்வேறு வகைகளில் நூற்றியைம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். . இவரது திரைப்படங்கள் சமூக அநீதி, ஊழல் மற்றும் பாலின பாகுபாடு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. ராவ் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், ஒன்பது மாநில நந்தி விருதுகள் உட்பட ரகுபதி வெங்கையா விருதையும், மற்றும் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் அடங்கும்.[1][2] மேலும், இவர் தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]
ஸ்வர்க் நாரக் , ஜோதி பனே ஜுவாலா , ஜாக்மி ஷெர் , சர்ஃபரோஷ் , வஃபாதர் , பிரேம் தப்சயா , பியாசா சாவன் , ஆஜ கா எம்.எல்.ஏ. ராம் அவ்தார் மற்றும் ஆஷா ஜோதி போன்ற இந்தித் திரைப்படங்களை இயக்கியதற்காக ராவ் தேசிய அங்கீகாரம் பெற்றார்.[4][5][6] இவர், அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கியதற்காக லிம்கா உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.[7] இவர் இயக்கிய 'தந்திர பாப்பராயுடு' (1986), மற்றும் 'சூரிகாடு' (1992) போன்ற படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழா பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.[8][9] மற்றும் இவர் இயக்கிய, " கன்டே கூத்துர்னெ கனு" (1998) திரைப்படம் சிறப்பு குறிப்பு அம்சம் உள்ள திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதினைப் பெற்றது. 1983 ஆம் ஆண்டில், இந்திய பனோரமா, தாஷ்கென்ட் திரைப்பட விழா,, 1983 கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் மாஸ்கோ திரைப்பட விழா ஆகியவற்றில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மேகசந்தேசம் என்கிற இவர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[10][11]
ராமஜோ ராவின் செய்தித்தாளான ஈநாடு பத்திரிகையை எதிர்த்து "உதயம்" என்கிற பிரபலமான தினசரி பத்திரிகை ஒன்றை அவர் தொடங்கினார்.[12][13]
2006 ஆம் ஆண்டில் ராஜ்ய சபாவுக்கு தாசரி நாராயண ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நிலக்கரி அமைச்சக அமைச்சராக பணியாற்றினார்.[14] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார், 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் தாசரி மீண்டும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.[15]
2013 ஜூன் 11 ம் தேதி நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய அரசின் விசாரணைக்கு தாசரி நாராயண ராவ் உட்படுத்தப்பட்டார். நவீன் ஜிண்டால் என்பவரிடமிருந்து 2.25 கோடி ரூபாய் பெற்ற, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக, மனு தாக்கல் செய்யப்பட்டு, இருவருக்கும் எதிரான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.[16][17]
நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட ராவ், மே 30, 2017 அன்று (இரவு 7 மணிக்கு) இறந்தார். அவரது மரணத்தின் போது அவருக்கு வயது 70ஆக இருந்தது.[18] அவரது இறுதிச் சடங்குகள் முழு மாநில கௌரவத்துடன் நடத்தப்பட்டன. ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள மோனாபாத் கிராமத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில், தகனம் செய்யப்பட்டார்.[19]