ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
4-அமினோ-5-குளோரோc-என்-(1,2-டையெத்தில்பைரசோலிடின்-4-ஐல்)-2-மெத்தாக்சிபென்சமைடு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | கட்டுப்படுத்தவில்லை |
வழிகள் | வாய்வழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 70181-03-2 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 54801 |
ChemSpider | 49487 |
UNII | CV07VSP2G8 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C15 |
மூலக்கூற்று நிறை | 326.82 கி/மோல் |
தாசோபிரைடு (Dazopride) என்பது C15H23ClN4O2 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பென்சமைடு வகை வாந்தியடக்கி மற்றும் இரையகக் குடற்பாதை இயக்க முகவர் ஆகும். இம்மருந்து இதுவரை சந்தைப்படுத்தப்படவில்லை. ஆங்கில எழுத்துகளில் ஏ.எச்.ஆர்-5531 என்ற குறியீட்டால் இம்மருந்து அடையாளப்படுத்தப்படுகிறது [1][2][3][4][5]. ஐதராக்சிதிரிப்டமீன் என்ற புரத வகை 5-எச்டி3 ஏற்பியெதிரியாகவும் மற்றும் ஐதராக்சிதிரிப்டமீன் என்ற புரத வகை 5-எச்டி4 ஏற்பியின் முதன்மை இயக்கியாகவும் தாசோபிரைடு செயல்படுகிறது [3][4][6]. இரையகக் குடற்பாதை விளைவுகளுடன் கூடுதலாக சுண்டெலிகளின் கற்றல் மற்றும் நினைவு இடர்பாடுகளை தாசோபிரைடு எளிதாக்குக்கிறது[7]