தாஜி படவடேகர் | |
---|---|
பிறப்பு | 15 செப்டம்பர் 1921 மும்பை, பம்பாய் மாகாணம், இந்தியா |
இறப்பு | 15 செப்டம்பர் 1921 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
கல்வி | மும்பை வில்சன் கல்லூரி |
பணி | நாடக நடிகர், திரைப்பட நடிகர் |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1965) பத்மசிறீ (1967) |
கிருஷ்ணசந்திர மோரேசுவர் (Krishnachandra Moreshwar) தனது மேடைப்பெயரான தாஜி படவடேகர் (Daji Bhatawadekar) (15 செப்டம்பர் 1921 - 26 டிசம்பர் 2006), என அறியப்படும் இவர், ஓர் இந்திய நாடக ஆளுமையும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இந்தியாவில் சமசுகிருதம் மற்றும் மராத்தி நாடகங்களின் மறுமலர்ச்சிக்கு இவர் பெருமை சேர்த்தார்.[1] 1965 இல் சங்கீத நாடக அகாதமி விருதை வென்றவர்.[2] 1967 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார், சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]
தாஜி படவடேகர் 1921 செப்டம்பர் 15 அன்று பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் பம்பாயில் பிறந்தார். பம்பாயில் உள்ள ஆர்யா கல்விச் சங்கத்தில் பள்ளிப்படிப்பைப் பெற்றார்.[4] மும்பை, வில்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும், மும்பை பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[5] ஒரு அலுவலக வேலையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் நாடகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். மும்பையை தளமாகக் கொண்ட இலக்கிய சங்கமான மும்பை மராத்தி சாகித்ய சங்கத்தில் ஈடுபடத் தொடங்கினார்.[6]
படவடேகர் பல மராத்தி, சமசுகிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழி நாடகங்களில் நடித்தார். மேலும், துர்கா கோட் போன்ற நடிகர்களுடனும் புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே மற்றும் எர்பர்ட் மார்சல் போன்ற இயக்குனர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.[6] 'மும்பை பிராமண சபா'வுக்காகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.[5] இவர் 78 வெவ்வேறு வேடங்களில் நடித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில பல முறை மேடையேற்றப்பட்டது.[5] தோச்சி ஏக் சமர்த், மித்ரா, ஹீ தார் பிரேமச்சி காரி கம்மத் அஹே, லக்னாச்சி கோஷ்டா, மக்பத் மற்றும் துஜா அஹே துஷ்பாஷி ஆகியவை இவரது நன்கு அறியப்பட்ட நாடகங்களில் சில.[5][6] விஜேதா (1982) என்ற படத்திலும் நடித்தார். தூர்தர்ஷன் ஒளிபரப்பிய பியோம்கேஷ் பக்ஷி (1993) என்ற தொலைக்காட்சி தொடருக்காக மக்டி கா ராஸ் [7] என்ற தொடரில் நந்த் துலால் பாபு மற்றும் வேனி சன்ஹார் [8] தொடரில் பெனி மாதவ் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஆங்கிலம் மற்றும் சமசுகிருதத்தில் ஒரு அறிஞரான இவர்,[6] சமசுகிருத நாடகம் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார், அழகியல் ( ரசம் ) மற்றும் வெளிப்பாடு ( அபிநயா ) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்.[5] தனது 70 களிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் . மேலும், 74 வயதில் முனைவர் பட்டம் பெற்றார் [5] நாட்டிய பூசண், கலா குராவ், மகாராஷ்டிர ரத்னா மற்றும் நட சாம்ராட் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். 1965 ஆம் ஆண்டில், சமசுகிருத நாடகத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.[9] இந்திய அரசாங்கம் 1967 இல் பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது [10] இவர் மும்பையில் சார்னி சாலையில் உள்ள படவடேகர் வாடியில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் வசித்து வந்தார்.[5] மும்பை மராத்தி சாகித்ய சங்கம் இவர் இறந்த டிசம்பர் 26 ஆம் தேதியை டாக்டர் தாஜி படவடேகர் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கிறது.[11]
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link): "Byomkesh Bakshi: Ep#4- Makdi ka Ras". யூடியூப்.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link): "Byomkesh Bakshi: Ep#31 - Veni Sanhar". யூடியூப்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: bot: original URL status unknown (link). Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 31 March 2016. Retrieved 9 May 2015.