தாஜ் கன்னிமரா சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.[1] இது சென்னையில் உள்ள பாரம்பரிய ஹோட்டல்களில் ஒன்றாகும். தாஜ் குழுமத்தின் ஹோட்டல்களின் வரிசையில் இதுவும் ஒன்று. இது சென்னையின் பழம்பெரும் ஹோட்டல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2]
1854 இல் தாஜ் கன்னிமரா ஹோட்டல் முதன் முதலில் திருவல்லிக்கேணி இரத்தினவேலு முதலியாரால் ‘இம்பிரியல் ஹோட்டல் என்ற பெயரால் கட்டப்பட்டது, 1886 ஆம் ஆண்டு இரு முதலியார் சகோதரர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது, அப்போது ‘அல்பனி’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1890 ஆம் ஆண்டு[3] புதியதாக கன்னிமரா என்ற பெயருடன் மீண்டும் நிறுவப்பட்டது. அயர்லாந்து நாட்டின் கன்னிமாரா என்ற மாகாணத்தின் பிரபுவான ராபர்ட் பஃவர்க் சென்னையின் ஆளுநராக 1881 முதல் 1886 வரை இருந்ததற்குப் பின்னர் இவ்வாறு மாற்றப்பட்டது.[4]
1891 ஆம் ஆண்டு ஸ்பென்ஸரினுடைய உரிமையாளரான ‘யூஜின் ஆக்ஷாட்’ அண்ணா வட்டத்திற்கு அருகிலுள்ள சிறிய கடையும் இணைந்து ஹோட்டலையும் அதனைச் சுற்றியுள்ள ஒன்பது ஏக்கரையும் சேர்த்து வாங்கி ஷோரூம் ஒன்று உருவாக்கினர். இதனை உலகறியச் செய்யுமாறு ஆசியாவிலேயே மிகப்பெரிய பல்பொருள் அங்காடியாக அவர் உருவாக்கினார். 1930 ஆம் ஆண்டு ஸ்பென்ஸரின் இயக்குனரான ‘ஜேம்ஸ் ஸ்டீவன்’ ஒரு புதுவிதமான தோற்றத்தினை இதற்குக் கொடுக்க ஆரம்பித்தார், இந்த வேலைப்பாடுகள் 1934 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் நடைபெற்று 1937 ஆம் ஆண்டு முடிவடைந்தது.[5] 1920 – 1930 ஆம் ஆண்டின் காலகட்டக் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த ஹோட்டல் 1937 ஆம் ஆண்டில் மீண்டும் திறக்கப்பட்டது.[6] ஹோட்டலின் உயரமான கட்டிடமும் அதனுடன் இணைந்த குளமும் கட்டிடக் கலை நிபுணரான ‘ஜியோஃப்ரி பாவா” ஆல் 1974 இல் கட்டப்பட்டது. 1984 ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல்களின் குழுமம் இந்த ஹோட்டலினை வாங்கியது.
2008 ஆம் ஆண்டு எஸ். முத்தையா எழுதிய புத்தகக் குறிப்பில் இதனைப் பற்றி பாரம்பரியச் சிறப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் பழைய சென்னை நகரம், கட்டிடங்கள் ஆகியவற்றின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் 1939 ஆம் ஆண்டு முதல் இருந்த ஹோட்டலின் உட்கட்டமைப்புத் தொகுப்புகளின் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.[5] முத்தையாவின் குறிப்பின்படி கன்னிமரா ஹோட்டல் உலகிலுள்ள தலைசிறந்த ஹோட்டல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ’ஹோட்டல் விவண்டா’ என தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தினால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையின் பின்னி சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. கன்னிமரா ஹோட்டல் (விவண்டா) ஸ்பென்ஸர் பிளாஸா எனும் பெரிய அங்காடிக்கும், மவுண்ட் சாலைக்கும் மிகவும் அருகில் அமைந்துள்ளது. அரசு அருங்காட்சியகம், அப்பல்லோ மருத்துவமனை, எம் ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானம் போன்ற குறிப்பிடக்கூடிய இடங்கள். இவை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. அமெரிக்கத் தூதரகம் (3 கிலோ மீட்டர்), சாந்தோம் கதீட்ரல் பஸிலிக்கா (7 கிலோ மீட்டர்), கபாலீஸ்வரர் கோவில் (7 கிலோ மீட்டர்) மற்றும் டி நகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (6.5 கிலோ மீட்டர்) ஆகியவை முறையே அருகிலுள்ள பிற இடங்கள் ஆகும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:
மொத்தம் 150 அறைகளையும், 5 சூட் அறைகளையும் கொண்டுள்ளது. குளத்தையும் நகரத்தயும் பார்க்கும் வகையில் அறைகளின் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறைகளில் எல்சிடி தொலைக்காட்சி, இணைய வசதி மற்றும் பல குறிப்பிடும்படியான வசதிகள் உள்ளன.[7]
2004 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலின் 65 அறைகளையும் தாஜ் ஹோட்டல்களின் குழுமம் சீரமைப்பு செய்தது.[8]
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: no-break space character in |publisher=
at position 18 (help)
{{cite web}}
: no-break space character in |publisher=
at position 19 (help)