தானா மேரா மக்களவைத் தொகுதி

தானா மேரா (P027)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Tanah Merah (P027)
Federal Constituency in Kelantan
தானா மேரா மக்களவைத் தொகுதி
(P027 Ketereh)
மாவட்டம் தானா மேரா
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை99,213 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிதானா மேரா தொகுதி
முக்கிய நகரங்கள்தானா மேரா, புக்கிட் பானாவ், குவால் ஈப்போ, கெமகாங்
பரப்பளவு687 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்இக்மால் இசாம் அசீஸ்
(Ikmal Hisham Aziz)
மக்கள் தொகை126,470 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் தானா மேரா மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (94.8%)
  சீனர் (4.1%)
  இதர இனத்தவர் (0.5%)

தானா மேரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ketereh; ஆங்கிலம்: Ketereh Federal Constituency; சீனம்: 格底里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், தானா மேரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P027) ஆகும்.[8]

தானா மேரா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து தானா மேரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

தானா மேரா மாவட்டம்

[தொகு]

தானா மேரா மாவட்டம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். தானா மேரா நகர்ப்புறப் பகுதி கிளாந்தான் ஆற்றின் வழியாக அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தின் வடக்கில் பாசீர் மாஸ் மாவட்டம்; கிழக்கில் மாச்சாங் மாவட்டம்; தென் கிழக்கில் கோலா கிராய் மாவட்டம்; தென் மேற்கில் ஜெலி மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தாய்லாந்து நாடு மேற்கில் உள்ளது.

சேது ரக்தமரிதிகா சிற்றரசு

[தொகு]

சேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு முன்னர் காலத்தில் தானா மேரா மாவட்டத்தில் இருந்தது. அந்த அரசு சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு ஆகும்.[10]

சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[11] கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது.

தானா மேரா மக்களவைத் தொகுதி

[தொகு]
தானா மேரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் தானா மேரா தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P023 1959–1963 ஒசுமான் அப்துல்லா
(Othman Abdullah)
மலேசிய இசுலாமிய கட்சி
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P023 1963–1964 ஒசுமான் அப்துல்லா
(Othman Abdullah)
மலேசிய இசுலாமிய கட்சி
2-ஆவது மக்களவை 1964–1969 முசுதபா அகமது
(Mustapha Ahmad)
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[12][13]
3-ஆவது மக்களவை P023 1971–1973 முகமட் யாக்கோப்
Mohamed Yaacob
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை 1974–1978
5-ஆவது மக்களவை 1978–1982 உசேன் மகமுட்
(Hussein Mahmood)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P026 1986–1990 அசீம் சாபின்
(Hashim Safin)
8-ஆவது மக்களவை 1990–1995 இப்ராகிம் படே முகமது
(Ibrahim Pateh Mohammad)
செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P027 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 சாபி தாவூத்
(Saupi Daud)
மாற்று முன்னணி
(கெஅடிலான்)
11-ஆவது மக்களவை 2004–2008 சாரி அசன்
(Shaari Hassan)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 அம்ரான் கனி
(Amran Ab Ghani)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 இக்மால் இசாம் அசீஸ்
(Ikmal Hisham Aziz)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018
2018–2019 சுயேச்சை
2019–2020 பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தானா மேரா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
98,782
வாக்களித்தவர்கள்
(Turnout)
70,667 71.34% - 10.11%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
69,686 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
624
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
161
பெரும்பான்மை
(Majority)
4,498 63.83% Increase + 58.79
வெற்றி பெற்ற கட்சி மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[14]

தானா மேரா வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மலேசிய இசுலாமிய கட்சி இக்மால் இசாம் அசீஸ்
(Ikmal Hisham Aziz)
69,686 54,279 77.87% + 34.47% Increase
பாரிசான் நேசனல் முகமட் பக்ரி முசுதபா
(Mohd Bakri Mustapha)
- 9,781 14.04% - 34.40%
பாக்காத்தான் அரப்பான் முகமது சுபர்டி நூர்
(Mohamad Supardi Md Noor)
- 5,357 7.69% - 0.48 %
பூமிபுத்ரா கட்சி நசீர் அப்துல்லா
(Nasir Abdullah)
- 168 0.24% + 0.24% Increase
சுயேச்சை நிக் சபேயா நிக் யூசோப்
(Nik Sapeia Nik Yusof)
- 114 0.16% + 0.16% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. Michel Jacq-Hergoualc'h (2002). BRILL (ed.). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad). Translated by Victoria Hobson. pp. 411–416. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11973-6.
  11. Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-9948-38-2.
  12. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  13. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
  14. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]